உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவாணர் இறுதிப் பேருரை

@

99

சிறப்பாக எடுத்துரைக்கிறவர் பர். இலாகோவாரி என்கிறவர் (Dr. N. Lahovary). அவர் 'திராவிடத் தோற்றமும் மேற்கும்' (Dravidian origin & the West) என்ற ஒரு பொத்தகம் எழுதியிருக்கிறார். அதிலே மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார். அந்த ‘பிரனிசு மவுண்டன்' பாசுக்கு மொழி அத்தனையும் அமிழுக்கு நெருக்கமான திராவிட மொழிகள். இசுபெயின் நாட்டு எல்லையில் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. இவற்றை ஆராய்ச்சி செய்ய வேண்டும். அப்படியே ஆரியம் வருமுன்னால் அந்தக் கிழக்கிலே இருந்த மொழிகளும் திராவிடத்துக்கு இனம் என்று காட்டியிருக்கிறார்.

நான் ‘ஊர்” என்று சொன்னேன் ‘ஊரோ’டு நிறுத்தி விட்டேன். இன்னம் ஒரே சொல்லை மட்டும் கூறி நிறுத்திவிடுகிறேன். ‘புரம்' என்று அந்தக் காலத்திலேயே பழைய கோட்டைகளையெல்லாம் கட்டின பிற்பாடு இந்த அரசர்கள் என்ன செய்தார்கள் கோபுரங்கள் கட்டியிருந்தால் தங்களுக்கு இருந்ததுபோலவே அந்தத் தெய்வத்திற்கும் இருக்க வேண்டும் என்றுதான் தாங்கள் அந்தச் சிற்றின்பத்திற்காக இன்பத்திற்காக - அந்தத் தெப்பங்கள், நீரோட்டம், தெப்பத்தேர் இழுப்பது இப்படியெல்லாம் தங்களுக்கு இருப்பதுபோலவே உயர்ந்த காவல் கோபுரம் தங்களுக்கு இருப்பது போலவே அவர்களுக்கும் ஏற்றிவைத்தார்கள். இதிலே இந்தப் புரம் இன்று சொல்கிற ஊரெல்லாம் கோவில் கோபுரங்கள் உள்ள ஊராகத்தான் இருக்கும. (குறிப்பு 13) காஞ்சிபுரம் என்பதுபோல. ‘புரி' என்று வருகிற ஊரெல்லாம் கோட்டை இருக்கிற ஊர்களாகத்தான் இருக்கும். ' தந்தாசுதர் - டன்தாசுதர்' என்று அங்கே எப்படி வழங்குகிறார்களோ அது போல் இந்த புரி என்றிது வழங்கினதும். (அவை யினரின் கையொலி சற்றுநேரம் நீடித்தது. புரிதல் என்றால் வளைதல். புரிசை- பிரிதல் என்று சொன்னால் மதில்-புரியினாலே சூழப்பட்ட நகர்களெல்லாம் புரி என்றே வரும். இந்தச் சொற்கள்தான் அங்கேயும் வழங்கி வந்தன...... (குறிப்பு 14...... தச்தன்புரி, எடின்பரோ, சிதர்ன்பரன் இப்படியெல்லாம் அந்த இடங்கள் இன்னும் அங்கே வழங்குகின்றன........ (மீண்டும் அந்த சிலர் கையொலி எழுப்பினர்) இதற்கெல்லாம் மூலம் இங்கே தமிழில்தான் இருக்கிறது. இதோடு நிறுத்திவிடுகிறேன்.

6

ஆரிய மொழிகளைப் பேசுகிறவர்களிலே கிரேக்கர் ஒருசாரார். இவர்களெல்லாம் காசுபியன் கடல் பக்கத்திலே தென் பாகத்திலே குடியேறினவர்கள் - குடியேறி வழங்கினவர்கள். கிரேக்க மொழிக்கு நெருக்க மானது அது அதாவது வேதமொழிக்கு மூலமான மொழி - இதற்கு நெருக்கமானது. ஆனால் அவர்கள் அந்தக் காலத்திலே நாகரிகமான நிலையில் இல்லை. ஆடுமாடு மேய்த்துக்கொண்டு நாடோடிகளாக இருந்தவர்கள். கிரேக்கர்களுக்கென்று ஒரு தனிநாடு இருக்கிறது. செருமனிக்கு - பிரான்சுக்கு இருக்கின்றன. அமெரிக்காவுக்கு அவர்கள் குடியேறிச் சென்றாலும் எந்த