உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

பாவாணர் உரைகள்

நாட்டிலிருந்து எந்த நாட்டிலிருந்து வந்தால் என்றால் செர்மனியிலிருந்து பிரான்சிலிருந்து வந்தேன் என்று சொல்லிக் கொள்வார்கள்.

ஆனால் இவர்களுக்கு வேத ஆரியர்க்கு முன்னாலே எங்கு இருந்து வந்தான் என்று சொன்னால் இவர்களுக்கு நாடும் இல்லை; ஒன்றுமே இல்லை. ஆகவே நாடோடியாக குடும்பம் குடும்பமாக வந்து சேர்ந்தார்கள் (மீண்டும் அவையோரின் கையொலி) இங்கே வந்து சேர்ந்த உடனே அவர்களுடைய தெய்வங்கள் எல்லாம் சிறு தெய்வங்கள் - வேதத்தில் தெய்வத்தை நீங்கள் பார்த்தீர்களானால் அதில் கடவுளே இல்லை. சோமபானத்தை (சோமக்கள்ளை)ப் போய்த் தெய்வமாக வணங்கிப் போற்றி மிகப் பாராட்டி இருக்கு வேதத்திலே நூற்றிருபது மந்திரம், (குறிப்பு 15) சோமபானத்தைப் பற்றி அந்தப் பானகம் பற்றி - "எப்படித் 'தோத்தரிக்க' வேண்டும் தெரியுமா?" அதையெல்லாம் இங்கே சொல்ல நேரமில்லை. மேக்தனால் (A.A. Macdonell) போல் எத்தனையோ பேர் அதைப்பற்றி யெல்லாம் எழுதிவைத்திருக்கிறார்கள். ஆகவே மிகத் தாழ்ந்த நிலையிலே உள்ளவர்கள். அந்தநிலையிலே கிழக்கே முதலிலே சிந்து ஆற்றுப் பக்கம் இருந்தார்கள். - சிந்துவெளியிலே - அதற்கப்புறம் கிழக்கே தள்ளி நடுவிலே அந்த பிரமவத்தம் என்கிற பெயர் வைத்துக் கொண்டார்கள். மேலும் கிழக்கே காளிக்கோட்டம் (கல்கத்தா) வரையிலே போய் ‘ஆரியவர்த்தம்" என்று வட இந்தியாவிற்கெல்லாம் பெயர்வைத்துக் கொண்டார்கள். இங்கே போனபிறகுதான் அந்தக் காளிவணக்கத்தை மேற்கொண்டார்கள். இது (மீண்டும் அந்த சிலரின் கையொலி) தமிழர்களுக்குரிய பழக்கம். அங்கே இருக்கிற அந்தக்காலத்தில் தெய்வங்களிற் கூட - சொல்லப் போனால் சில இரண்டொரு தெய்வங்களைப் பற்றிக்கூடப் பழைய தொடர்பைக்கூட நாம் காட்டிக்கொள்ளலாம்.

66

வருணன் என்று சொல்வார்களே அந்த வருணன் என்ற சொல் தமிழிலே வாரணன் என்று திரியும். (குறிப்பு 16) (வாரணம் - கடல், வராணன் கடலோன்) அது நெய்தல் நிலத்தெய்வம். வராணன் கடல் அது மேரினிசம் (Marinism) என்றிருக்கிறது. இலத்தீனிலே மேரினிசம் தர்சி (Marimism Terce) Marine என்றாலும் கடல். இவர்கள் பிற்காலத்திலே போய் இந்தக் கடல் தொடர்பு அற்றுப்போனதினாலே வாரணன் என்பதை வருணன் என்று பெயர் வைத்துவிட்டார்கள். இப்பொழுதுங்சுட “வருண செபம்” என்று மழைத்தெய்வத்தை வணங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கே தொல்காப்பியத்திலே "வருணன் மேய பெருமணல் உலகமும்" என்றிருக்கிறது. அது “வாரணன் மேய ஏர் மணலுலகமும்' என்று இருந்திருக்க வேண்டும் முற்காலத்திலே. (குறிப்பி 17, 18) அவர்கள் இங்கு வந்து சேர்ந்தவுடனே அந்தக் காளிவணக்கத்தை முதலில் வைத்துக் கொண்டார்கள்... (மீண்டும் கையொலி) பிறகு முருகன் வணக்கம் சிறந்தது