உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயல்புடைய மூவர்

7

என்று சிறப்புரையும் கூறியுள்ளார். இவற்றின் பொருந்தாமைக்குப் பல காரணங்கள் உள.

முதலாவது, பிரமசரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம் என்னும் நால்வகைப் பிராமணிய வாழ்க்கைநிலையைத் தமிழர் ஒப்புக் கொள்ளவில்லை. ஆதலால், வள்ளுவரும் அதை

ஒப்புக்கொண்டிலர், தமிழர் வகுத்த வாழ்க்கைநிலையெல்லாம், இல்லறம் துறவறம் என இரண்டே. இல்லறத்தை மேற்கொள்வானின் மாணவநிலை இல்லறத்தின் பாற்படுவதே. துறவறத்தை விரும்பவானின் மாணவநிலையும், உண்மையின்மை (கூடாவொழுக்கம்), உறுதியின்மை (தொடராமை), ஆகிய காரணங்களால் துறவறத்தின் பாற்பட்டுவிடாது. மனைவியொடு கூடிவாழும் வாழ்க்கை ஒருபோதும் துறவாகாது. இன்ப நுகர்ச்சியாற்றலழிந்தபின், இன்பத்தை வெறுத்ததாக நடிப்பது, பார்வை யிழந்த பின் படக்காட்சி பாராமையொத்ததே. ஆதலால், உண்மையான அறநிலை தமிழர் கண்டவையே.

இரண்டாவது, “இயல்பு” என்பது அதிகாரத்தான் இல்வாழும் யல்பைக் குறிக்குமேயன்றிப் பொதுவாக அறத்தை உணர்த்தாது. இங்குள்ள அதிகாரம் “இல்வாழ்க்கை” என்பது, பொதுவான அறம் “அறன் வலியுறுத்தல்” என்னும் அதிகாரத்திற்குரியதாம்.

மூன்றாவது,

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை”

(குறள் .42)

என்னும் அடுத்த குறளில், துறவியரைக் குறிக்கின்றார் வள்ளுவர். முந்தின குறளில், "இயல்புடைய மூவர்” என்று குறிக்கப்பட்ட வருள் துறவியரையும் பரிமேலழகர் அடக்கிவிட்டதனால், இங்கு, “களைகணானவராற் றுறக்கப் பட்டார்” என்று “துறந்தார்” என்னும் சொற்குப் பொருந்தாப் பொருள் கூற வேண்டியதாயிற்று. துவ்வாதவருள் களைகணானவரால் துறக்கப் பட்டாரும் அடங்குவர். துறந்தார் என்னும் வினையாலணையும்பெயர் செய்வினை வாய்ப்பாட்டிலிருப்பதால், அதற்குத் துறவியர் (உலகப்பற்றைத் துறந்தவர்) என்று நேர்பொருள் கொள்வதே நேரிதாம்.

நான்காவது, முற்றத்துறந்த யோக வொழுக்கத்தானை இல்வாழ்க்கை யதிகாரத்தின் முதற்குறளிலேயே குறிக்கத் தேவையில்லை. வள்ளுவர் இல்லறத்தாரை முதற்குறளிற் குறித்துவிட்டுத் துறவறத்தாரை இரண்டாங் குறளிற் குறித்தார் எனவே பொருத்தமாம். இல்லறத்தாருள்ளேயே ஒருவகுப்பார் ஏனை மூவகுப்பார்க்குத் துணை என்பதை எடுத்துக் காட்டுவதே ஆசிரியர் நோக்கமாம். துறவியர் ஒருதொழிலுஞ்செய்