உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

பாவாணர் உரைகள் யாமையின், அவர்க்கு இல்வாழ்வான் துணை என்பது வியக்கத்தக்க செய்தியன்று.

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பாற் குடிகளுள், வேளாளரையே இல்லறத்தாருட் சிறந்தவராக எடுத்துக்கொண்டார் திருவள்ளுவர். அந்தணர், முனிவரான துறவறத்தாரும் புலவரான இல்லறத்தாரும் ஆக இருசாரார், ஒரு நாட்டின் நல்வாழ்விற்கு உழவு, வணிகம், அரசு, கல்வி என்னும் நான்கும் இன்றியமையாதன. இவற்றை நடத்துவோரே, முறையே, வேளாளர், வணிகர், அரசர், அந்தணர் என்போர். வேளாளர்க்கில்லாத அறிவு, அதிகாரம், செல்வம் ஆகிய சிறப்புப்பற்றி, ஏனை மூவகுப்பாரும் நூல்களில் முற்கூறப்பெற்றனர். நகரமக்களான பதினெண் தொழிலாளரும் திணைநிலை மாந்தரான குறவரிடையர் செம்படவரும் உழவர்க்குப் பக்கத்துணைவராயிருந்தமைபற்றி, கைத்தொழி லெல்லாம் உழவில் அடக்கப்பெற்றன.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்”

என்னும் இயல்வரையறைப்படி, அந்தணர் என்பது நீத்தாரையே குறிக்கு மெனினும், கல்வியொப்புமைபற்றி ஆசிரியர் உவச்சர் ஆகிய இல்லறத் தாரும் நாற்பாற் பாகுபாட்டில் அந்தணரொடு சேர்க்கப்பெறுவர். இக்குலங்க ளெல்லாம் தொழில்பற்றியனவே யன்றி இக்காலத்திற்போற் பிறப்புப் பற்றியவல்ல.

மக்கள் உயிர்வாழ்க்கை, அரசியல் வெற்றி, இரப்போர் பிழைப்பு, துறவியல் நிலை ஆகியவற்றிற்கு உழவர் இன்றியமையாதவர் என்பதை,

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா(து) எழுவாரை யெல்லாம் பொறுத்து.

(குறள். 1032)

‘பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்.”

(குறள். 1034)

‘இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்."

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம்என் பார்க்கு நிலை."

(குறள். 1035)

(குறள். 1036)

என்னுங் குறள்களாற் பெறவைத்தார் திருவள்ளுவர். உழவர் எனினும் வேளாளர் எனினும் ஒன்றே. வேளாண்மைக்குச் சிறந்தமையின் உழவர் வேளாளர் எனப்பெற்றார். வேளாண்மையாவது விருந்தோம்புதலும் வேண்டியன கொடுத்துதவதலும்.