உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயல்புடைய மூவர்

"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்(கு) ஐம்புலத்தா றோம்பல் தலை.'

9

என்னும் இல்வாழ்க்கையியல்பு வேளாளர்க்கே சிறப்பாம். களத்திற்கண்ட கண்டுமுதலில் ஆறிலொருபங்கை அரசனுக்குக் கடமையாக இறுத்து, எஞ்சியதைத் தென்புலத்தார் தெய்வம் முதலியவர்க்குச் செலவிடுவது. வேளாளனுக்கே இயலும். ஏனையரெல்லாம் பெரும்பாலும் குறிப்பிட்ட பணத்தையே வரியாகச் செலுத்துபவரும் வருவாய்ளவு கண்டுபிடிக்கப் படாத நிலைமையருமாயிருந்தனர்.

இல்வாழ்க்கைக்குச் சொல்லப்பட்ட அறங்களுள் ஒன்றான விருந்

தோம்பலைப்பற்றிய அதிகாரத்தில்,

‘வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்."

(குறள். 85)

என்று வேளாளனைமட்டும் ஏன் விதந்து குறிக்கவேண்டும்? பிற தொழில் களைக் குறியாவிடினும், திருவள்ளுவர் செய்து வந்ததாகச் சொல்லப்பெறும் நெசவுத் தொழிலைப்பற்றியாவது,

பஞ்சும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி எஞ்சல் மிசைவான் கதிர்.

என்றோ,

நூலும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மேலை மிசைவான் தறி.

என்றோ, கூறியிருக்கலாமே!

“வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்”

என்னும் நல்லாதனார் கூற்றும்,

"செட்டிமக்கள் வாசல்வழிச் செல்லோமே செக்காரப் பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே-முட்டிபுகும் பார்ப்பார் அகத்தையெட்டிப் பாரோமே எந்நாளும் காப்பரே வேளாளர் காண்”

என்னும் கம்பர் பாட்டும், விருந்தோம்பும் அறம் வேளாளன் சிறப்பியல்பு என்றன்றோ காட்டும்!

இனி, பாயிரத்தைச்சேர்ந்த வான்சிறப்பதிகாரத்திலும்,

"ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்

வாரி வளங்குன்றிக் கால்.'

(குறள். 14)

என்று வேளாளரையே சிறப்பித் தோதினர் வள்ளுவர். ஆதலால், “இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்" ஆன