உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

பாவாணர் உரைகள் அந்தக் கலைச் சொல்லை ஆக்குவதற்குக் காரணமாக அடிப்படையான சில உண்மைகளை நாம் தெரிந்து கொள்ளல் வேண்டும். பிற மொழியெல்லாம் இந்த முறையில் இல்லையே. இந்தி முதலான பிறமொழிகளிலெல்லாம் எத்தனையோ பிறமொழிச் சொற்களைச் சேர்த்துக் கொள்கின்றார்களே. தமிழில் ஏன் சேர்த்துக் கொள்ளக் கூடாது; ஆங்கிலச் சொற்களை அப்படியே வைத்துக் கொள்ளலாமே; ஏன் அவைகளை மொழி பெயர்க்க வேண்டும்; என்று கூட சிலரிடத்திலே கருத்தெழுகின்றது. அதற்காகத் தான் அடிப்படையாகச் சில கருத்துகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று கூறுகிறேன். முதலாவது தமிழர்கள் தெற்கே இருந்து வடக்கே போனார்கள் என்று தெரிந்து கொள்ளல் வேண்டும். பலருக்கு இஃது இன்னும் தெரிய வில்லை, பல தமிழாசிரியர்களுக்கும் தெரியவில்லை, சில பேராசிரியர் களுக்கும் கூடத் தெரியவில்லை. தமிழ் வரலாற்று ஆசிரியர்களுக்கும் தெரியாது. ஆனால் சில வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கனவே நமக்குத் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். பி. டி. சீனிவாச ஐயங்கார், இராமச்சந்திர தீட்சிதர் போன்றவர்கள் மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு ஆகியவற்றை எல்லாம் நீங்கள் நன்றாக எடுத்துப் பாருங்கள். அதற்கு மேலே, நான் மொழி நூல், மொழியாராய்ச்சியை வரலாற்று அடிப்படை வைத்தே ஆராய்ந்திருக்கிறேன். வேறு சில கலைகளின் துணை இன்றியமையாததா யிருந்ததால். அவற்றையும் நான் கற்றிருக்கிறேன்: தமிழர் தெற்கே இருந்து வடக்கே போனவர்கள். அதாவது தெற்கே குமரிநாடு என்று ஒரு பெரிய நிலம் இருந்து மூழ்கி விட்டது. இங்கே இருந்துதான் வடக்கே போனார்கள். கால்டுவெல் அவர்களால் திராவிட மொழிகள் 13 என்று கணக்கிட்டிருப்பதை, 19 என்று கணக்கிடப்பட் டிருக்கின்றன. இவை யெல்லாம் இந்தியா என்ற நாவலந் தீவுக்குள்ளேதான் வழங்குகின்றன. இவற்றுள்ளே சிறந்த பெருமொழிகளெல்லாம், இலக்கிய மொழிகளெல்லாம் இந்தத் தென்னாட்டிலேதான் வழங்குகின்றன. வடக்கே போனால் திராவிடமானது திரிந்தும், சிறுத்தும், சிதைந்தும் போகின்றது. இன்னும் போனால் வட நாவலத்தில், பலுசித்தானத்திலே ஒன்றும், வங்காளத்தில் ஒன்றுமாக, வட இந்தியாவிலே சிதறிக் கிடக்கின்றன. தெற்கே வரவர திராவிடமானது திருந்திக் கொண்டு வருகிறது. நாற்பெரும் திராவிட மொழிகள் எல்லாம் தென்னாட்டில் தான் இருக்கின்றன. அந்த நான்கு மொழிகளுள்ளும் சிறந்த தமிழ் தெற்கேதான் இருக்கிறது. அதனாலே பாண்டியனுக்கும் தென்னவன் என்று பெயர். தென்னாடு என்பதும் சிறப்பாக பாண்டிய நாட்டைத்தான் குறிக்கும். இந்தத் தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டாலும் தெற்கே போகப் போகத்தான் தமிழ் திருந்திக் கொண்டே போகிறது. திருநெல்வேலியில் ஒரு வழக்குச் சொல் ஒரு வகையாகச் சொல்லிக் கொள்வார்கள். அது என்ன? மிகவும் திருத்தமாகப் பேசுவ