உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் மொழியில் கலைச் சொல்லாக்கம்

6

13

தென்றால் : “திருத்தக் கல்லுக்குத் தெற்கிட்டுப் பிறந்தவன் என்பார்கள். ஆகவே இந்தத் தெற்கு என்பதற்குத் 'திருத்தம்' என்று ஒரு பொருள் இருப்பதைப் பார்க்கிறோம்.

இப்போது வட ஆர்க்காட்டுத் தமிழைப் பார்ப்போமே, 'இழுத்து இழுத்து உதைத்தான்' என்பதை 'இசுத்து இசுத்து ஒச்சான்' என்பான். திருநெல்வேலியிலே அப்படி வழங்காது. திருநெல்வேலியிலே அப்படிச் சொன்னால் விளங்கவும் விளங்காது தூய தமிழிலே பேசுகிறார்கள். திருநெல் வேலியிலே கூடிய வரையிலே நன்றாகப் பேசுகிறார்கள். நான் திருநெல் வேலி நாட்டுப் புறத்து மொழியை ஆராய்ந்ததனால்தான் இந்தச் சிறந்த உண்மைகளைக் காணமுடிந்தது. நாட்டுப் புறத்திலேதான் நல்ல தமிழ் வழங்குகிறது. நாட்டுப் புறத்திலேயும் தென்னாட்டிலே திருநெல்வேலியிலே தான் நல்ல தமிழ் வழங்குகிறது. இங்கு வழங்காதச் சில சொற்கள்கூட அங்கே சிறப்பாக வழங்குகின்றன. எடுத்துக்காட்டாகச் சொல்லுகிற தாயிருந்தால் 'துப்புரவு' என்ற சொல்லைக் கொள்ளலாம். இங்கே 'சுத்தம்' என்ற வடசொல்லைத்தான் வழங்குகிறார்கள். அங்கே எல்லாம் துப்புரவாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதுவுமில்லாமல் வேறு எத்தனை யோ சொற்களெல்லாம் இங்கே வழங்காத சொற்களாக இருக்கின்றன.

அதாவது அரிசி போன்ற உணவுப் பொருள்கள் நீண்டநாள் இருந்து கெட்டு விட்டால் காந்தி விட்டது என்று சொல்வார்கள். திருநெல்வேலியிலே வழங்கும் அந்தச் சொற்கள் எல்லாம் இந்தப் பக்கம் வழங்குவதில்லை. அதோடுகூட இங்கு விளையாத சில பொருள்களுக்கும் பெயர்கள் வழங்கு கின்றன. காடைக்கண்ணி, குதிரைவாலி முதலிய சில பொருள்களை நான் இங்குக் காணவே இல்லை. மற்ற வரகு, சாமை முதலியவை இருக்கின்றன. இந்த இரண்டும் இல்லை. இனி விளை பொருள்கூடச் சில வடிவு வேறு பட்டவை; கருவி வேறுபட்டவை. வடிவு வேறுபட்டாலும், கருவி வேறு பட்டாலும் பெயர் வேறு பட்டிருக்கின்றன. இப்போது இங்கே மூங்கிலால் செய்யப்பட்ட முறம் இருக்கிறது. அங்கே சுளகு இருக்கிறது. சுளகு இங்கே வழங்காது. திடீரென்று திருநெல்வேலி முழுகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறு அழிந்துவிட்டால் துப்புர வென்ற சொல்லும் இந்தக் காடைக்கண்ணி, குதிரைவாலி என்ற சொற்களும் அடியோடு முழுகிவிடும்.

இப்படியே குமரி நாட்டின் தெற்கே குறைந்தது ஈராயிரம் கல் தொலைவிலுள்ள ஒரு பெரிய நிலப்பரப்பு அமிழ்ந்துபோய் விட்டதனாலே உலக வழக்குச் சொற்களில் ஆயிரக்கணக்கான சொற்கள் மறைந்தே போய்விட்டன. அதற்குமேலே என்னவென்றால் இலக்கிய வழக்கிலும் அவை முழுவதும் அழிந்துவிட்டன என்று நான் சொல்லுகிறேன். ஏனென்றால் ஆரியம் தென்னாட்டுக்கு வரும் முன்னே ஆரியச் சார்பான