உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் மொழியில் கலைச் சொல்லாக்கம்

23

நான் இதைக்கூட தொகுக்கும்படி சென்னைப் பல்கலைக் கழகத்தாருக்கு எழுதிக் கேட்டேன். அகரமுதலியில் உள்ள குறைபாடுகளைக்கூட அச்சிட்டு வழங்கினேன். அதற்கு விடை இதுவரை ஒன்றும் கிடைக்கவில்லை.

சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், என்னவோ, தனக்குத் தெரியாவிட்டால், பிறருக்கும் தெரியாது என்று. எல்லாவற்றிற்கும் சொற்கள் இருக்கின்றன. உனக்குத் தெரியாவிட்டால் பிறருக்குத் தெரியாது என்று நினைத்துக் கொள்ளாதே; உன்னாலே புதுச்சொல் புனைய முடியாவிட்டால் பிறருக்குச் சொல்ல முடியாது என்று நினைத்து விடாதே. முதலாவதாகத் தமிழ் ஆக்க மொழி என்று சொல்லிக் கொண்டு பல்கலைக்கழகத் தமிழ் அகர முதலியில் டர். லக்கிடி என்ற தமிழ் அல்லாத சொற்களையும் சேர்த்து விட்டிருக்கிறார்கள். 1933-இல் ‘டர்', வந்து விட்டது. 'டர்' என்றால் அச்சம். இந்தியிலே, வரப் போகிறது பிற்காலத்திலே என்பதை நமக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

நாஞ்சில் நாடு என்ற இடத்திலே, புனல் (Funnel) என்பதை 'வைத்தூற்றி என்று வழங்குகிறார்கள். வைத்து ஊற்றுவதினாலே இதற்கு “வைத்தூற்றி” என்று பெயர். இங்கே யெல்லாம், புனல் என்றல்லவா நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாஞ்சில் நாடு திருநெல்வேலியை ஒட்டியது. திருநெல்வேலி செந்தமிழ்ப் பாண்டிய நாடு என்று சொன்னேனே, அதற்குச் சான்றாக இன்னும் பல சொற்கள் வழங்குகின்றன. அங்கும் புகைவண்டி வந்தது; train வந்தது, train என்றோ, இரயில் என்றோ ஒன்றும் சொல்லவில்லை. புகைவண்டி என்று கூறினார்கள். அதற்கப்புறம் Cycle வந்தது. மிதி வண்டி என்று கூறினார்கள். ஆனந்தவிகடன் போன்ற செய்தித்தாள்கள் தாம் துவிச்சக்கரம் என்று எழுதுகின்றன. ஏனென்றால் Cycle என்பதை மொழி பெயர்க்கிறார்களாம். By என்றால் இரண்டு, Cycle என்றால் சக்கரம். இரண்டு சக்கரங்கள் உடைய வண்டியை துவிச்சக்கர வண்டி என்று மொழி பெயர்க்கிறார்கள். மிதிவண்டி என்று கூறுவதால் என்ன கெட்டுப் போய்விடும்.

ஆகவே தமிழிலேயே பல கலைச் சொற்களை உண்டாக்க முடியும். அவ்வாறு இருக்க 'பிற மொழிகளின் உதவியின்றேல் கலைச்சொல் ஆக்க முடியாது' என்று கூறுவார் கூற்று, பொருளற்றது, பொருத்தமற்றது என்று கூறி நேரமின்மையால் இத்துடன் என்னுரையை முடிக்கிறேன்.

“தமிழம்” 1.3.1974