உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

பாவாணர் உரைகள்

அதனால் நாம் இந்தச் சன்னலைப் போக்கி விடவேண்டும். சன்னல் நமதன்று. இந்த ஒன்றுக்கு இடங்கொடுத்தால் இன்னொன்றுக்கும் இடங் கொடுக்க வேண்டியதுதான். அயற்சொல் என்றால் என்றால் அயற்சொல் தான். எந்தச் சொல் யார் வழங்கினாலும் சரி. எல்லாம் தொலைய வேண்டியதுதான். சேத்திரம் என்றால் சேத்திரக் கணிதம் வந்து விடுமே. கையினாலே, அயற்சொற்களெல்லாம் எதற்கு? தென் சொற்கள், தமிழ்ச் சொற்கள் இருக்கும் போது. தமிழ்ப்பற்றில்லாதவன் என்ன வேண்டு மானாலும் சொல்வான். ஒருவனுக்குத் தாயின் மேலே பற்றிருக்கிறது, அவன் என்ன செய்வான்! தாய் நோய்வாய்ப் பட்டிருந்தால், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்து 'நான் உங்களை நலப்படுத்தத்தான் போகிறேன்' என்று சொல்லிக் கொண்டுதானிருப்பான். பற்றில்லாதவன் 'சவத்தைத் தூக்கியெறியுங்கள்; ஏன் இவ்வளவு பணம் செலவழிக்கிறீர்கள்' என்பான். அதுபோல பலர் சொல்லிக் கொண்டே யிருக்கிறார்கள். ஆகையினாலே சொற்களை நாம் தமிழ்ப்படுத்த வேண்டும். இப்போது தமிழ்ப் படுத்துவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. தமிழிலே சொற்கள் நிறைய இருக்கின்றன. வடமொழியிலே சில சொற்கள் இருக்கின்றன. மலையாளத்திலிருக்கிறவை எல்லாம் தமிழ்ச் சொற்கள்தாம். சமற்கிருத மல்லாத மலையாளச் சொற்களெல்லாம் பழைய சேர நாட்டுத் தமிழ்ச் சொற்கள் என்பதை மறந்து விடக்கூடாது. இன்னும் அதற்குமேலே வட நாட்டிலும் சில சொற்கள் இருக்கத்தான் செய்கின்றன. இன்றைக்கும் நீர் என்ற சொல் வங்காளத்தில் வழங்கிக் கொண்டிருக்கின்றது.

வடநாடு முழுவதும் திராவிடர்கள் இருந்த நாடு ஒரு காலத்திலே. இப்போதுதான் அவர்கள் சிதறிக்கிடக்கிறார்கள் வடநாட்டிலே. உங்கு இங்கு என்ற சொல் தில்லியிலே வடமேற்குப் பகுதியில் 'சாக்' என்ற ஒரு மொழியிலே வழங்குகிறது. மற்ற இடங்களிலே இதர், உதர் என்கிறார்கள். இந்த இடத்திலே இங்கு, உங்கு என்கிறார்கள். ஆகவே இந்தச் சொற்க ளெல்லாம், பழைய காலத்திலே அவர்கள் திராவிடராக இருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இதற்கு மொழிநூல் சான்று. “திராவிடரின் ஒரு சாரர்தாம் வடமேற்கில் போய் ஆரியராக மாறிவிட்டனர். அந்த ஆரியருள் ஒரு சரார்தாம் திரும்ப வேத ஆரியராக வருகிறார்கள்” இது இராமச்சந்திர தீட்சிதருடைய நூலிலே தெளிவாக இருக்கின்றது. அதற்கு முன்னாலே பி. டி. சீனிவாச ஐயங்கார் எழுதிய வரலாற்று நூல்களை யெல்லாம் நன்றாகப் பாருங்கள். நானும் முப்பதாண்டுகளாகச் செய்து வரும் ஆராய்ச்சிகளின் முடிவுகளையெல்லாம் ஓர் ஆங்கில நூலாக ஏற்கெனவே சேலத்தில் எழுதி முடித்தேன்.

தமிழில் சொற்களை ஆக்குவதற்குப் பல வகையான வழிகளெல்லாம் இருக்கின்றன. உலக வழக்கிலே கூட எத்தனையோ சொற்கள் இருக்கின்றன.