உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் மொழியில் கலைச் சொல்லாக்கம்

21

அப்படியே பெண்பனையை ஆண் பனை என்று எழுதியிருக்கிறார்கள்; Just a masculine of it. இதற்கும் அதற்கும் என்ன வேறுபாடிருக்கிறது. இப்படிப்பட்டவர்களெல்லாம் இந்த அகரமுதலியைத் தொகுத்து வைத்திருக்கிறார்கள். மத்தியானம் என்ற சொல் எந்தச் சொல்தெரியுமா? ‘மத்திய அயம்' என்ற வடசொல். அதற்கு வழங்கிய தமிழ்ச் சொற்கள் எவை எவை தெரியுமா? உருமம், உச்சிவேளை, நண்பகல்; மூன்று சொற்கள் ஆகின்றன. திருநெல்வேலியிலே 'உருமம்' என்பார்கள். அது வேனிற் காலத்திலே சொல்ல வேண்டும். அதுவும் வெப்ப நேரத்திலே சொல்ல வேண்டும். ஏனென்றால், 'உருமம்' என்பது சூடு, வெப்பத்தைக் குறிக்கும். இந்த உருமத்திலே நீ வந்திருக்கிறாயே என்று கேட்பார்கள். நண்பகல் என்பது இலக்கிய வழக்கு. இவையெல்லாம் விட்டு விட்டு 'மத்தியானம்' அதற்கப்புறம் அதனுடைய சிதைவு மதியம். இது எதற்குச் சமமாக அமைந்து விடுகிறது? பூரண சந்திரனுக்குத் தமிழ்ப் பெயர் 'மதியம்' மதி என்றால் சந்திரன். 'மதியம்' என்றால் (Full Moon) பூரண சந்திரன். நாலடி யாரிலே வருகிறது. 'அங்கண் மதியம்' அம என்பது பெருமைப் பெயர் பின்னொட்டு (Auxilary suffix) நிலை என்றால் (Stand) நிலையம் என்றால் (Station) இப்படியே, பெருமைப் பொருள் பின்னொட்டைக் குறிக்க வரும் போது அந்த 'அம்' வருகிறது. 'கம்பு' என்றால் சிறியது. 'கம்பம்' என்றால் பெரியது. 'ஸ்தம்பம்' என்று மாழி பெயர்த்திருக்கிறார்கள். இப்படி மொட்டைத் தலைக்கும் முழுங்காலுக்கும் முடி போட்டு வைக்கிறார்கள்.

இப்போது மகிழ்ச்சிக்குரியது என்னவென்றால், இப்போதிருக்கின்ற இளம்சிறார்கள் உள்ளத்திலே தமிழ் உணர்ச்சியினை எப்படியோ இறைவன் திரும்பப் படைத்திருக்கிறான். இனிமேல் அடுத்த தலைமுறையிலேதான் அது வரும். பழைய தலைமுறையிலே பார்ப்பராயிருந்தால் இந்த மூன்று அகக்கருணக் கூறுகளும் இல்லவே இல்லை. கல்வியும் அப்படித்தான் காண்கிறது.

'நான் தாழ்ந்தவன், நான் தாழ்ந்தவன்' என்று இப்படி நினைக்கவே வேண்டா. 'நான் உயர்ந்தவன், நானும் ஒரு மகன்தான்; நானும் பிறரைப்போல துப்புரவாக இருக்க முடியும்; எனக்கும் இறைவன் அறிவைக் கொடுத் திருக்கிறான்' என்ற எண்ணம் வேண்டும். உருசியாவிலே போய்ப்பாருங்கள், எவ்வளவு தாழ்ந்து கிடந்தவர்கள், காட்டு விலங்காண்டியாக இருந்தவர்கள், ஏழைக் குடியானவர்கள், கடைசியில் அமெரிக்கர்களை விடச்சிறந்து உயர்ந்திருக்கிறார்கள். ஆகையினாலே இன்ன குலம் என்றில்லை; இன்ன குடும்பம் என்றில்லை; மதி நுட்பமுள்ள யாரும் கற்கலாம். இதெல்லாம் இடைக் காலத்திலே வேண்டுமென்றே கற்பிக்கப்பட்டவை.

பலகணி, சாளரம், காலதர் என்ற மூன்று சொற்கள் இருந்தது அந்தக் காலத்திலே. இப்போது சன்னல் என்ற போர்த்துக்கீசியச் சொல் வழங்குகிறது.