உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

பாவாணர் உரைகள் இப்படித் தவறான சில முடிவுகள் இருக்கின்றன. சமற்கிருதச் சொற்களை ஆய்ந்து பார்த்தீர்களானால் பகுதிச் சொற்கள் எல்லாம் தமிழாக இருக்கும். வடிவு மாறியிருப்பதால் அவற்றை எல்லாம் விளக்க எனக்கு நேரமில்லை. ஆகவே 'சியாமா' என்ற அந்தச் சொல்லை அப்படித் திருத்தி விட்டிருக் கிறார்கள்.

‘வரால்' என்றால் 'குரவை' என்று எழுதி வைத்திருக்கிறார்கள் ஏன் தெரியுமா? அங்கே இருந்தவர்களெல்லாம் ஊன் உணவு உண்ணாதவர்கள். கறிக்கடையைக் கனவிலும் காணாதவர்கள். ஆகவே, அவர்களுக்குப் புலாலுணவு பற்றிய சொற்களே தெரியாது. மேனாட்டிலே அகரமுதலி தொகுப்பதாயிருந்தால் இந்த இடர்ப்பாடே இல்லை. ஏனென்றால் பெரும் பாலோர் ஊன் உணவினர். மரக்கறி உணவினர் என்ற வேறுபாட்டிற்கு இடமில்லை. இங்கே அது இருக்கிறது. அதனாலே 'வராலை' குரவை என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

'தானே தரக்கொளின் அன்றித் தன்பால்

மேவிக்கொளக் கொடா விடத்தது மடற்பனை”

என்று நன்னூலில் இருக்கிறதே அது பெண் பனையாக இருக்குமோ, ஆண் பனையாக இருக்குமோ சொல்லுங்கள் பார்க்கலாம்? ஆண் பனை என்று நன்னூலின் நூற்பாவையே மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார்கள். அதுதான் அதில் வேடிக்கையானது. 1924ஆம் ஆண்டு ஆம்பூரிலே நான் ஆசிரியனாக இருந்தேன். அப்போது நாட்டியல் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. சீனிவாசமூர்த்தி என்ற ஒருவர் என் அறையிலே உடனுறைந்து கொண்டிருந்தார். அப்போது அவர் வேடிக்கையாக ICS. தமிழ் எப்படிப்பட்டது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

I.C.S தமிழ் எப்படியிருக்கும் தெரியுமா? அங்கு என்ன செய்வார்கள் தெரியுமா? 'Give the Tamil meanings of the following words,' என்று ஒரு கேள்வி இருக்கும். அதிலே அவன் 'யானை' என்று கேட்டிருப்பான். அதற்கு இவன் 'pig' என்று எழுதி வைப்பான். அப்போது திருத்தாளர் என்ன செய்வாரென்றால், பக்கத்திலிருக்கும் உதவித் துணையாளரைப் பார்த்துப் 'படி' என்று சொல்வார். அவன் 'Pig' என்று படிப்பான். 'Alright, something like that, give five marks' என்று சொல்லுவார். அதற்கு அப்புறம் என்ன செய்வாராம்? வினாத்தாளில் இன்னொரு இடத்திலே 'பசு' என்று எழுதியிருப்பதற்கு இவன் 'Cow' என்று கூட எழுதத் தெரியாமல், 'எருது' என்று ஆங்கிலத்திலே எழுதி வைத்திருப்பான். 'Alright just a masculine of that; Give another five mark' என்று சொல்வார். இப்போது இது எப்படி இருக்கிறது. வரால் எவ்வளவு பெரிது? குரவை எவ்வளவு சிறியது? 'Some- thing like that'. அவ்வளவுதான். வராலைப் போன்றது தானே குரவை.

6