உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் மொழியில் கலைச் சொல்லாக்கம்

19

இந்த 'கள்' என்பது கள்ளுதல், கள்ளுதல் என்றால் கலத்தல், கள்ள, கடப்ப என்பன தொல்காப்பியத்தில் உவம உருபுகள். கள்ளுதல் என்றால் பொருந்துதல் அல்லது கலத்தல். அது தான் கள் என்று பெயர். 'அம்' விகுதி சேர்ந்தது. களம் என்றால் கூட்டம்; போர்க்களம் என்று சொல்வதில்லையா. அக்காலத்தில் பல பொருள்கள் ஒன்றாகக் கலப்பதற்குக் 'கள்' என்ற பன்மை விகுதியைச் சேர்த்தார்கள். இந்த 'பார்க்' என்பது எப்படியிருக்கிறது பாருங்கள். எவ்வளவு கெட்டுப் போயிருக்கிறது. இப்படியே சொற்களைச் சொல்லிக் கொண்டே போனால் நேரமாகும். ஓரரிசிப் பதமாக எடுத்துச் சொல்கிறேன். ஆகவே இப்படியாக மொழிதிரிந்து கிடக்கிறது. மேனாட்டவர் வரலாற்றை ஒட்டி மொழியை ஆராயாமல் திடுமென்று மலைவாழ்நர் களெல்லாம் பழங்குடி மக்கள் என்று தவறான கருத்தைக் சொல்கின்றனர். அப்படியானால் நாளைக்கு நாம் கொடைக்கானல் போனாலும் கூட நாமும் பழங்குடி வாசிகள் என்று சொல்லிக் கொள்ளுவது நேரத்தான் செய்யும். ஆகவே இந்த அகர முதலியில் என்ன செய்திருக்கின்றார்கள் என்றால் இப்படி 'சாமை' என்பதைச் 'சியாமா' என்று திருத்தி அதற்குக் 'கருப்பாதை' என்று பொருள் காட்டியிருக்கிறார்கள். சாமை உமியும் கருப்பன்று; அரிசியும் கருப்பன்று, இது பொருந்துமா? என்று கேட்கிறேன். சில தமிழ்ச் சொற்களைச் சமற்கிருதம் என்றவுடனே சிலர் தலைமையாக எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். சமற்கிருதம் எது தெரியுமா? வேத ஆரியம் (Vedic Language) என்று ஒரு மொழி இருந்தது. அதற்கு வைதிக ஆக்கம் அல்லது வேத மொழி என்று பெயர். அந்த வேத ஆரியம் வழக்கற்றுப் போனது. ஏனென்றால் அவர்கள் சிறுபான்மையினராக இருந்தார்கள். இந்தப் பெரிய திராவிட மக்களோடு கலந்த பின் கடலிலே காயம் கரைத்தது போல ஆகிவிட்டது. அதனால் அவர்கள் வழக்கற்றுப் போன மொழியை இலக்கியம் அமைவதற்கு ஏற்ற சொற்கள் இல்லாமையினாலே அக்காலத்து வழக்கம் வட்டார மொழிகளிலிருந்து (Regional Languages) ஏராளமான சொற்களைக் கலந்து கொண்டார்கள். அப்போது தலைமையாயிருந்தது தமிழ்தான்.

அந்தக் காலத்து வட்டார மொழிகளுக்குத்தான் (Regional Languages) ‘பிராக்ருதம்' என்று பெயர், 'பிரா' என்றால் முன்னாலே 'கிருதம்' என்றால் செய்யப்பட்டது. சமற்கிருதம் என்பது வழக்கற்றுப் போன வேதமொழியோடு அக்காலத்தில் வழக்கிலிருந்த வட்டார மொழிகளெல்லாம் சேர்த்து ஆக்கிக் காண்ட அந்தச் சொல் இலக்கிய மொழியில்தான் அந்தச் சமற்கிருதம் வந்தது. அதன் பொருள் நன்றாகச் செய்யப்பட்டது என்பது. வேத ஆரியம் வேறு. சமற்கிருதம் வேறு. பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் வேத ஆரியமும், வேத சமற்கிருதமும் ஒன்றுதான் என்று. இதுதான் 'என் பாட்டன் திருமணத்திற்கு நான் பாட்டுக் கட்டினேன்' என்பது போலுள்ளது. ஆகவே