உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் வரலாற்று, தமிழ்க்கழக அமைப்பு மாநாட்டுத் தலைமையுரை

25

தமிழ்மொழி கெட்டதற்குக் காரணமே சமயம்தான். ஏனெனில் சமயத்துறையில்தான் முதன்முதலில் ஆரியர்கள் வடமொழிச் சொற்களைப் புகுத்தினர். வடமொழி தேவமொழி யென்றும், அதனை ஒலிமுறை பிறழாமல் ஓதும் ஆற்றல் பார்ப்பனருக்கு அதாவது பிராமணர்க்குத்தான் உண்டென்றும் கூறி, கோவில்களில் வழிபாடு செய்யும் அதிகாரத்தைத் தங்களுக்கே உரியதாக்கிக் கொண்டனர். இப்படிச் செய்தது கி. மு. 1200 என்று சொல்லலாம்.

பார்ப்பனர் என்று சொல்லும் பொழுது எனக்கு இன்னொருசெய்தி நினைவுக்கு வருகிறது. அஃதாவது, ஆரியர் இந்நாட்டிற்கு வருமுன், பார்ப்பார் அல்லது பார்ப்பனர் என்னும் சொல் தமிழரையே குறித்தது; பிற்காலத்தில்தான் அச்சொல் ஆரியருக்கு உரியதாயிற்று. அவர்கள் வருவதற்குமுன் தமிழ்நாட்டுக் கோயில்களில் ஓதுவார், நம்பியார், பண்டாரம், புலவர் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் தாங்கிய தமிழர்களே வழிபாடு நிகழ்த்தி வந்தனர். அவர்கள் அனைவரும் பார்ப்பார் எனும் பொதுப் பெயரால் குறிக்கப்பட்டனர். இவ்வாறே அந்தணர் என்னும் சொல்லும், சமயத்தொடர்பு உடைய தமிழ்ச்சொல் ஆகும். பார்ப்பார் என்பது இல்லறத்தாரைக் குறிக்கும். அந்தணர் என்பது துறவறம் மேற்கொண்ட முனிவர்களுக்கு உரியதாகும்.

ஆகவே தமிழ்நாட்டிலுள்ள ஆரியர்களைப் பார்ப்பார் என்று சொல்லுதல் பொருந்தாது. அவர்களைப் பிராமணர் என்று குறிப்பிடுவதே தகுதியுடையது; வேண்டுமானால் ஆரியப் பார்ப்பனர் என்று சொல்லலாம். அவ்வாறு அடைமொழி யில்லாமல் ‘பார்ப்பார்' என்று சொன்னால் அவர்கள் தமிழர்கள் ஆகிவிடுவர். அதனால் என்ன தவறென்று நீங்கள் நினைக்கலாம். தவறொன்றுமில்லை. ஆனால் பிராமணனை நாம் தமிழன் என்று ஏற்றுக் கொண்டாலும், அவன் அதை ஒத்துக்கொள்வதில்லையே! நம்மைவிட உயர்ந்தவன் - மேலானவன் - நம்மின் வேறானவன் என்றல்லவோ அவன் தன்னைக் கருதிக்கொண்டிருக்கிறான், சொல்லி வருகிறான்!

ஆப்பிரிக்காவில் குடியேறிய வெள்ளையர்கள் எப்படி அந்தநாட்டுப் பழங்குடி மக்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று, தங்கள் நிறவெறி காரணமாகக் கூறிவந்தார்களோ, அப்படியேதான் இந்த நாட்டிற்கு வந்த

ரியர்களும் – இக்கால பிராமணர்களும் 'பூதேவர்' என்றும் ‘பூசுரர்' என்றும் தங்களை உயர்வாகவே சொல்லிவந்தார்கள்; சொல்லி வருகிறார்கள். எனவே, இதை ஒருவகை நிறவெறிக்கொள்கை அதாவது (Brahman Aparthied) என்று சொல்லலாம்.

தொடக்கத்திலிருந்தே ஆரியர்கள் தங்களை மற்றவர்களிலிருந்து பிரித்துக்காட்டியே வந்துள்ளனர். மலையாளத்தில், அந்நாட்டுக் குடி மக்களான நாயர்கள் வாழும் வீடுகளுக்குக் “கரை” என்று பெயர்; ஆனால்