உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

பாவாணர் உரைகள் நெஞ்சுரம் ஆகிய மாந்தன் வளர்ச்சிக்கு இன்றியமையாத மூன்று இயல்பு களையும் அறவே அகற்றி விட்டனர். இறைவனையும் விதியையும் காரணமாகக்காட்டி, தமிழர்களின் முன்னேற்றத்தைத் தடை செய்துவிட்டனர்.

இதனாலேயே தமிழர்களிற் சிலர் பிராமணர்களை அறவே வெறுக்க முற்பட்டு, அவர்களுடைய உணவுக்கடைகளையும் புறக்கணித்து வரு கின்றனர். இங்கு வந்திருக்கும் சித்த மருத்துவர் தகடூர், செல்லையா அவர்கள், எவ்வளவுதான் பசிக்கொடுமையால் வாடினாலும், பிராமணர்களின் உணவுக் கடைக்குப் போகவே மாட்டார். அது மட்டுமன்று; பிராமணர்களுக்கு மருத்துவம் செய்யவும் மறுத்துவிடுவார். இத்தகைய நெஞ்சுரம் எல்லாத் தமிழர்களுக்கும் வேண்டும்.

சிறிது ஆழ்ந்து நோக்குவோமானால், உண்மையில் பிராமணர்கள் நம்மைவிட எந்தவகையிலும் உயர்ந்தவர் அல்லர் என அறியலாம். எடுத்துக்காட்டாக, ஒன்று சொல்கிறேன். பிராமணர்கள் தங்களை மற்றக் குலத்தாரைவிட உயர்ந்தவராகக் கருதிக்கொண்டு மற்ற இனத்தாரிடம் எதுவும் வாங்கி உண்ணமாட்டார்கள்; தமிழரில் உயர்ந்தவர்கள் என்று கருதப்பட்ட சைவ வேளாளர்கள் பொற்கலத்தில் ஏதேனும் உணவுவகை யிட்டுக் கொடுப்பினும் வாங்க மறுத்துவிடுவர். ஆனால் அவர்களே வேளாளரினும் தாழ்ந்தவராகக் கருதப்பட்டுவந்த இடையப் பெண்கள் பழைய மட்கலத்தில் கொண்டுவந்த மோரை வாங்கி 'வானமிழ்தம்' என்று கூறி, மகிழ்ச்சியாகக் குடிக்கின்றனர். இந்த முரண்பாட்டை என்னவென்று சொல்லுவது!

இப்படியெல்லாம் இருந்தும், பிராமணர்கள் தங்களை மேற்குலத்தா ரென்று சொல்லிக்கொண்டு, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களைத் தாழ்த்தி வந்துள்ளனர்; வருகின்றனர். இதற்குக் காரணம் தமிழர்களின் ஏமாறும் தன்மையேயன்றி, வேறன்று. 'எட்டினால் முடி; எட்டாவிட்டால் அடி' – இதுதான் பிராமணர்களின் வாழ்க்கைக் குறிக்கோள்.

இங்குள்ள பிராமணர்கள் புலால் உணவுக் கடைக்குச் செல்வதில்லை யென்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், வடநாட்டுப் பிராமணர்கள் புலால் உணவுக் கடைக்குச் சென்று, புலாலுணவு நீக்கி மரக்கறி உணவுமட்டும் உட்கொண்டு மீளுவர். தமிழ்நாட்டிலும்கூட, பிராமணர்கள் தங்கள் உணவுக் கடைகளில் எல்லாக் குலத்தாரையும், இனத்தாரையும் ஏற்றுக்கொள்கின்றனர், வாணிகம் என்ற முறையில். ஆனால் வீட்டில் மட்டும், எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் - பல்கலைக் கழகக் கண்காணகராக இருந்தாலும், பேராசிரியராக இருந்தாலும், உயர்முறை மன்ற நடுவராக இருந்தாலும், ஆளுநராக இருந்தாலும், அவ்வளவு ஏன் இந்தியக் குடியரசின் தலைவராக இருந்தாலும்கூட, ஒரு சிலரை ஏற்பதில்லை. இந்தப் பித்தலாட்டத்தை என்னவென்று சொல்வது!