உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் வரலாற்று, தமிழ்க்கழக அமைப்பு மாநாட்டுத் தலைமையுரை

27

இதுநிற்க. ஆரியர்கள் தமிழரை எவ்வழியில் வெல்லலாம் என்று எண்ணிப் பார்த்தார்கள். `Vulnerable Poison' என்பார்களே அதைப்போல, சமயத்துறையில் தலையிட்டால்தான், தமிழரை எளிதில் வெல்லலாம் என்று கண்டுகொண்டார்கள். தமிழருக்கு இயல்பாய் அமைந்த பழங்குடிப் பேதமை, சமயப்பித்து (Religious fanaticism) கொடைமடம் (Indiscriminate munificence) ஆகிய தன்மைகளைத் தங்கள் முன்னேற்றத் திற்குக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

முதலில் அரசர்களைச் சார்ந்து, அவர்களை வயப்படுத்தினர். பின்னர் அவர்கள் உதவியால் படிப்படியாகப் பொதுமக்களை வயப்படுத்தினர். இவ்வாறாக, முதலில் சமயத்துறையில் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டி, பிறகு அரசியலிலும் காலூன்றத் தொடங்கினர்.

ஆனால், இந்தச் சமயங்களில் எல்லாம் தமிழ்ப்புலவர்கள் வாளா இருந்துவிடவில்லை. அவ்வப்போது கடுமையான எதிர்ப்பு தெரிவித்தே இருக்கிறார்கள். ஆரியர் வருகையால் தமிழர்க்கு நேர்ந்த தீமைகளைக் கண்டு அஞ்சியே திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.

என்றாலும், பொதுவாகத் தமிழர்கள் ஆரியர்களைத் தங்கள் பகை வராக என்றுமே கருதியதில்லை. அவர்கள் இந்த நாட்டிற்கு வந்த காலந் தொட்டு அவர்களைத் தங்கள் உடன்பிறந்தவர்களைப் போல அன்பாகவே நடத்தி வந்திருக்கின்றனர். அவர்களை அயலாராக எண்ணி வெறுக்கவோ, விலக்கவோ இல்லை. "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பரந்த மனப் பான்மையுடனேயே பழகி வந்துள்ளனர். இருந்தும் கூட, பிராமணர்கள் அவர்களைத் தங்களைச் சார்ந்தோராகக் கருதாமல் ஒதுங்கியே வாழ்ந்து வந்துள்ளனர். இதனாலேயே நாம் அவர்களைத் தமிழர்கள் என்று ஒத்துக் கொள்ள முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இன்றும் கூட, எல்லாவகையிலும் தமிழின் சிறப்பை ஒழிக்க நினைக்கும் அவர்கள் இயல்பும், புறம் நட்டு அகம் வேர்க்கும் நச்சுத் தன்மையும் அவர்களை இன்னாரென்று நமக்கு எளிதில் புலப்படுத்தி விடுகின்றன!

இஃது ஒருபுறம் இருக்க, மேனாட்டார் தமிழின் மேன்மையையும் தமிழரின் பழைய பெருமையையும் உணரமுடியாமல் இருப்பதற்கு, இன்றைய தமிழரின் தாழ்ந்த நிலையும் ஒரு காரணம் ஆகும். இவர்களைக் காணும் ஆங்கிலேயர்கள், இத்தகையவர்களின் முன்னோர்கள் எப்படிச் சிறந்த நாகரிகம் உடையவர்களாகத் திகழ்ந்திருக்கக்கூடும் என்று ஐயுறு கிறார்கள். உண்மையைச் சொல்வதானால் பல நூற்றாண்டுகளாகத் தாழ்ந்த நிலையில் இருந்த ஆப்பிரிக்கர்கள் உயர்ந்துள்ள அளவிற்குக்கூட நம் தமிழர்கள் உயரவில்லை எனலாம். இதற்குக் காரணம் ஆரியப் பார்ப்பனர்களே யாவர். இவர்கள் தமிழர்களின் உள்ளத்திலிருந்து பகுத் தறிவு, தன்மானம்,