உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

பாவாணர் உரைகள்

தமிழை மீட்பது போராட்டத்தால்தான் முடியும். எழுதிப் பயனில்லை. திங்களை நாய் குரைத்தாற் போலிருக்கிறது.

தமிழன் ஆரியனுக்குத் தாழ்ந்தவனல்லன் என்றும் உண்மையை உலகறியச் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்னும் பெயரைப் புதுக்கியதால் இந்தி போய்விட்டதாகாது. கி.மு. 50000 முதலே 'தமிழ் நாடு' என்ற பெயர் இருந்து வந்துள்ளது. 'தமிழ்நாடு' மக்கள் வாயில் வழங்கிய சொல்லே!

நீலகண்ட சாத்திரியாரின் நூல் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. எந்தப் பேரியக்கமும் முதலில் சிறுஅளவில்தான் தொடங்கப்பட்டுள்ளது. இயேசுவிற்கும் 12 பின்பற்றிகளே இருந்தனர். இன்று எவ்வளவோ வளர்ந்த மதமாகிவிட்டது.

Throu- Thrill

துருவு - துல்

Trans (Latin) - Through - Transport.

தமிழ்ச்சொல் ஆங்கிலத்திற்கு வேர்ச்சொல்லாயிருப்பதைக் காண்க. ஆங்கிலத்தில் உள்ள சுட்டுச்சொற்கள் 'This, That' என்பன. தமிழில் சுட்டெழுத்துகள்கூட உள்ளன.

ஆயிடை (தொல்காப்பியம்) ஆவிடம் (மலையாளம்) ஏவூர் (தெலுங்கு)

வடமொழியிலும் காலம், உலகம் முதலிய தமிழ் அடிப்படைச் சொற்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

வடமொழியைத் தேவமொழி என்பது ஏமாற்றுவேலை. மறைப் பதற்குச் சொல்லப்படுவது. பொருந்தப் புளுகு, பொருந்தாப் புளுகு இரண்டுள் இது பின்வகையது.

ஆப்பிரிக்காவில் சென்ற நூற்றாண்டில் மாந்தனை அடித்துத் தின்றவர்கள் இருந்திருக்கின்றார்கள். அவர்களே வெள்ளையரை வெளியேற்றும் அளவிற்கு முன்னேறினார்கள்.

கீ. இராமலிங்கனார், சங்கராச்சாரியாரைப் பார்க்கச் சென்றபோது தமிழை நீசபாசை' என்று அவருடைய அணுக்கத் துணைவர் கூறி யிருக்கிறார். அதற்கு மறுப்புத் தெரிவிக்க அவர்க்குத் துணிவில்லை.

'

தமிழின் ஒருமைபன்மை அமைப்புச் சிறப்பானது.

நான் – நாம்