உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவாணர் சொற்பொழிவு

நீன்

வருவது)

43

நீம் (திருநெல்வேலியிலும் நாட்டுப்புறங்களிலும் பயின்று

தான் தாம்

'நின்' – வேற்றுமையடி.

ஆயினும் தூங்கினவன் கன்று சேங்கன்று என்றாகிவிட்டது. உலகத்தார் பிற்போக்காக இருந்தபோது நம்முன்னோர் மதங்களும் பொறிகளும் அமைத்து முன்னேறியிருந்தனர். திரவிடம் பத்தொன்பது மொழிகளைக் கொண்டது. 1856-ல் சோசப்பு என்பார் ஆங்கிலமொழியில் 35000 சொற்கள் இருந்ததாக அறுதியிட்டார். அவற்றுள் ஆங்கிலத்திற்கு மூலமான ஆங்கிலோ சாக்சன் (Anglo - Saxon) சொற்கள் 23000 இருந்தன. பின்னர் மாகசு முல்லர் (max muller) 75000 சொற்கள் இருப்பதாக அறிவித்தார். அச் சொற்களில்

100 க்கு 80 - கிரேக்க, இலத்தீன் சொற்களும்

100 க்கு 10 - ஆங்கிலோ சாக்சன் சொற்களும்

100 க்கு 10 - தமிழும், வேற்று உலக மொழிச் சொற்களும் உள்ளன. ஆங்கிலம் கடன்கொண்டதால்தான் வளர்ந்தது என்று சொல்வது தவறு. அறிவியலினால்தான் அம்மொழி வளர்ந்தது. அது உலகப் பொது மொழியாக மட்டுமில்லாமல் அறிவியல் மொழியாகவுமுள்ளது.

நாம் ஆங்கிலத்தை அடியோடு விட்டுவிடக் கூடாது. ஆனால், ஆங்கிலத்தால் தமிழ்ப்பற்றுக் குறையவும் கூடாது.

எண்ணத்திற்கு (Thinking) மொழி இன்றியமையாதது. ஊமைத்துரை ஓர் எடுத்துக்காட்டாளர். பறவையும் விலங்கும்கூடி எண்ணுகின்றன. கம்பனின் மகனாக இருந்தாலும் மொழிவழங்காவிடத்திலிருந்தால்

பேசான்.

சட்டைக்காரன் வீட்டில் வளர்ந்தால் தமிழப் பிள்ளையும் கலகல வென ஆங்கிலம் பேசும்.

நமக்கு இருமொழித் திறமும் வேண்டும். ஆங்கிலத்தில் வெறுப்புக் கூடாது.

தமிழென்றால் தமிழாகவே இருக்க வேண்டும்.

அவலை நினைத்து உரலை இடிக்கக் கூடாது.

Divorce என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு 'விவாகரத்து' என்று பிராமண ஏடுகள் எழுதுகின்றன. 'மணமுறிவு' என்று சில ஏடுகள் எழுது கின்றன. இரண்டும் பிழையானவை. 'மணமுறிப்பு' என்று எழுதவேண்டும்.