உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

பாவாணர் உரைகள் இன்னும் நடைமுறையில் சில நல்ல சொற்கள் உள்ளன. அவை மணத்தீர்வை, தீர்த்துக் கட்டுதல் என்பன.

பக்தவத்சலம் ஏற்படுத்திய சட்டச்சொற்கள் தொகுப்புக் குழுவின் தலைவர் அனந்த நாராயணனுக்கு இச்சொற்கள் வாரா. அவர் தெய்வ (!)ப் பிறப்பாளர்.

ஆள் ஒன்றுக்குப், பேர் ஒன்றுக்குப், புள்ளி ஒன்றுக்குத், தலை ஒன்றுக்கு என்னும் வழக்குகள் நாட்டில் இருக்கின்றன. அவரோ 'நபர் ஒன்றுக்கு’ என்னும் சொல்லை விரும்புவதாகக் கூறியுள்ளார்.

'motor' என்னும் சொல்லைத் தமிழில் 'இயங்கி' என்று வழங்க வேண்டும். இராமலிங்கனார் தன்பெயர் நிலைபெற வேண்டுமென்று 'உந்து’ என்னும் சொல்லைக் கொண்டு வந்தார்.

விண்ணப்பம் (வ) - வேண்டுகோள் (தமிழ்)

ஆப்பிரிக்காவில் குக்குலத் தலைவர்கள் தம்பெயரால் ஒரு மொழியையே ஏற்படுத்தி விடுகின்றார்கள். 50 சொற்களே இருந்தாலும் அவை முழுதும் இடுகுறிகளாக இருந்தாலும் அவை ஒரு மொழியாகின்றன. கழகத்தின் நடைமுறைகள்

இக் கழகத்தின் தலைவர்கள் தொண்டு கருதியே தலைமை ஏற்க வேண்டும். அதிகாரிகள் தலைவணங்க வேண்டுமென்பதற்காக வன்று; பெயருக்காகவுமன்று.

திரு. சாத்தையாவும் இன்னும் இருவரும் நன்றாகச் செயற்பட் டுள்ளமைக்காகப் பாராட்டிற்குரியவர்கள்.

முற்றும் தனித்தமிழிலேயே பேசுவது எல்லோராலும் முடியாது, இயன்றவரை பேசவேண்டும். தனித்தமிழ் இதழான தென்மொழியிலேயே ஓரிரு வடசொற்கள் வெளிவந்தன. புவி, பரிமாணம், வதை போன்றவையே அச்சொற்கள்.

வதை ‘வதி' என்பதிலிருந்து வந்தது; வடசொல். எனவே தனித் தமிழிலேயே முற்றும் பேசவேண்டும் என்று வற்புறுத்த வேண்டா. இயன்ற வரை பேசினால் போதும்.

உறுப்பினர் சேர்ப்புப் படிவம் பற்றி:

கிளைக்கழகப் பெயர் இருக்கலாம்

கிளையில்லாதவிடத்தில் தனிப்பட்டவரும் சேரலாம்.

வேறு கிளையிலும் சேரலாம்.

மணந்தவரா, நோக்கம், அலுவல், பேச்சாளரா போன்ற பகுதிகள் தேவையில்லை. ஊமைகூடச் செயலாற்றலாம். உலகத் தமிழ்க் கழகம்