உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

பாவாணர் உரைகள்

நிலையை வைத்து, நாம் பண்டை நிலையை அறிய முடியாது” என்று ஒரு தவறான முடிவுக்கு வந்திருக்கின்றார்கள். அதற்கு அவர்கள் ஆங்கில மொழியையும் அடிப்படையாக வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய முறையை எடுத்துச் சொல்வ தானால், ஓர் உவமையால் உங்களுக்கு விளக்கலாம். அவர்கள் வரலாற்றுத் துறையையே அடியோடு விட்டு விட்டார்கள். அஃது, இப்பொழுது இங்கே உள்ள ஆரியச் சார்பானவர்களுக்கும், தமிழ்ப் பகைவர்களுக்கும் மிகவும் கொண்டாட்ட மாயிருக்கின்றது. ஏனென்றால், வரலாற்று முறையில் ஆராய்ந்து பார்த்தார் களென்றால் இந்த (தமிழ் முந்தியது; ஆரியம் பிந்தியது என்னும்) உண்மை நாளடைவில் வெளிப்பட்டு விடும்; அப்புறம் அவர்கள் ஏமாற்று எல்லாம் தெரிந்துவிடும். அவற்றை அடியோடு மறைத்துக் கொள்ளுதற்கு இந்த வண்ணனை மொழியாராய்ச்சி (வடிவியல் முறையை அடிப்படையாகக் கொண்டது) அவர்களுக்குத் துணை செய்கின்றது.

ஒரு குடும்பத்தில் பெற்றோர் யார்? பிள்ளைகள் யார்? அண்ணன் தம்பி யார்? அக்கை தங்கை யார்? என்றெல்லாம் ஆராய்ந்தறியாமல், ஒரு குடும்பத்தில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்? எத்தனைப்பேர் நெட்டையர்? எத்தனைப் பேர் குட்டையர்? எத்தனைப் பேர் என்னென்ன நிறத்தி லிருக்கிறார்கள்? என்னென்ன இயல்பு அவர்களுக்கு உண்டு - இவற்றைத் தாம் எடுத்துச் சொல்ல வேண்டும். மற்றபடி ஒன்றுஞ் சொல்லக் கூடாது. இதுதான் வண்ணனை மொழியாராய்ச்சி.

தெ. பொ. மீ. என்னும் ஒருவரை உங்களுக்குத் தெரியும். நம் பேரா சிரியர்களுள் ஒருவர். இப்பொழுது இருக்கின்ற ஒரு கேடான நிலைமை என்னவென்றால், மற்ற நாடுகளிலே இல்லாத ஒரு நிலைமை இங்கே தமிழை எவன் ஆராய்கின்றானோ அவனுக்கு ஒருவகை மதிப்பும் இல்லாமற் போக வேண்டும். அவனுடைய வாழ்க்கைக்கும் இடமில்லை, இங்கே! தமிழை எவன் காட்டிக் கொடுக்கின்றானோ அல்லது பகைக் கின்றானோ அல்லது பகைவரோடு சேர்ந்து கொண்டு கருத்தறிவிக் கின்றானோ அவனுக்குத்தான் நிறைய மதிப்பும் வாழ்வும் ஏற்பட வழியிருக்கின்றன, இங்கே!

தமிழ்மொழியே உலக முதன்மொழி. அஃதாவது திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமானது. திராவிடத்திற்குத்தாய் என்று முதன் முதல் நமக்கு உணர்த்தியவர் மனோன்மணியம் சுந்தரனார் ஆவார். சென்ற நூற்றாண்டிலே, இந்தியா முழுமையும் மட்டுமில்லை, உலக முழுமையும் ஓர் உயர்ந்த நிலையை அடைந்திருந்தது ஆங்கில மொழி. அந்த மொழி ஒன்றுதான் உயர்வாகக் கருதப் பெற்றது. அதில் பேசியவர்கள் தாம் உயர்ந்தவர்கள் என்றோ தேவர்கள் என்றோ மதிக்கப் பெற்றார்கள்.