உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

பாவாணர் உரைகள் சிறியது. விளக்கம் பெரியது. கலங்கரை விளக்கம் என்று சொல்ல வேண்டும். நிலை என்பது Sland. அது Station ஆக இருந்தால் நிலையம் என்று சொல்ல வேண்டும்.

இப்படி, உலகம் என்ற சொல்லை வடமொழியில் எடுத்துக் கொண்டு அதை லோக என்று சொன்னார்கள். அஃது இந்தியிலே லோக் என்று இருக்கிறது. இந்தியில் எப்பொழும் இப்படித்தான். மிக மிகக் குறுக்கி வைத்துவிடுவான். கிருகம் என்று வடமொழியிலிருந்தால் இந்தியில் கர் என்பான். இப்பொழுது என்று தமிழில் இருப்பதைப் படியாதவர்கள் இப்ப என்பார்கள். அது அப் என்று இந்தியில் வழங்குகிறது. இப்படி ஏராளமாகச் சொல்லலாம். இப்பொழுது நேரமில்லை. இப்படி முந்நூறு சொற்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சொற்களையெல்லாம் ஓர் அரங்கு கூட்டி நன்றாக மூலம் வேரெல்லாம் சொல்லி விளக்க வேண்டும். அதன் பின்னாலே எது முந்தினது தமிழா சமற்கிருதமா என்ற முடிவுக்கு வரவேண்டும். இந்தியாவில் மட்டுமில்லை; உலகத்தில் எந்தப் பகுதியில் இருந்தாலும் சரி; அப்புறம், எவராகவிருந்தாலும் சரி. சென்னைப் பல்கலைக் கழகத்திலே சமற்கிருதத் துறைத் தலைவராக இருந்த இராகவனாக இருந்தாலும் சரி; இனி, அவருக்குப் பின்னாலிருந்து குஞ்சனிராசாவாக இருந்தாலும் சரி; மேனாட்டில் இருப்பவர்களான பரோ, எமனோ யாராயிருந்தாலும் சரி; அவர்கள் எல்லாரும் வர வேண்டும். நாமும் இந்தத் தமிழ் பேராசிரியர்கள் அத்தனைப் பெயரையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு சொல்லுக்கும் நான் சொல் வரலாறு சொல்வேன். அவர்களும் (அந்தச் சமற்கிருதப் பேராசிரியர்களும்) அவர்கள் கருத்துப்படி அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும். இருதிறத்தார்க்கும் நடுவராக நம் குடியரசுத் தலைவரைக் கூட வைத்துக் கொள்ளலாம். அல்லது இந்திய உயர்நெறி மன்றத் தலைமைத் தீர்ப்பாளர் கூட இதற்கு நடுவராக இருக்கலாம். கடைசியிலே முடிவாக வேண்டும். இஃது என்ன சொல்; தென்சொல்லா வட சொல்லா என்று. அதற்கப்புறம் ஒருவனும் வாய்திறக்கவே கூடாது. (பெரிய அளவில், கை தட்டல்) இப்படி இல்லாவிட்டால் இந்தப் 'பெருமாள்' களெல்லாம் இப்படித்தான் எழுதிக் கொண்டே வருவார்கள். தமிழர்க ளெல்லாரும் ஒரு கலவையினம்; இந்தத் தமிழ்மொழி சமற்கிருதத்திலிருந்து தான் வந்தது' என்று இப்படி! எனவே, அப்படியொரு போராட்ட நிலையை நாம் உருவாக்க வேண்டும் என்று கூறி என் உரையை நான் முடித்துக் கொள்கின்றேன். வணக்கம்.

-தென்மொழி