உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி

99


தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி

99

முன்னும், வடஇந்தியாவரை திரவிடர் பெரும்பான்மையராகவும் தமிழர் சிறுபான்மையராகவும் பரவியிருந்தனர். தமிழரே திரவிடராகவும் திரவிடரே பிராகிருதராகவும் மாறியதனால், ஆரியர் வந்த காலத்தில் வடஇந்தியர் பெரும்பாலும் பிராகிருதராகவும், நடுவிந்தியர் பெரும்பாலும் திரவிட ராகவும் இருந்தனர் என்று கொள்ளலாம்.

கி.மு. 4ஆம் நூற்றாண்டுவரை, சமற்கிருத இலக்கியத்திற் சேர சோழ பாண்டியம் என்னும் முத்தமிழ்த் தென்னாட்டரசுகளே குறிக்கப்பட்டுள்ளன. ஆயின், கி.மு. 3ஆம் நூற்றாண்டிற் பொறிக்கப்பட்ட அசோகன் கல்வெட்டு களில், பாண்டியம் சோழம் கேரளபுத்திரம் (சேரலம்) என்னும் முத்தமிழ் அரசக் குடிகளுடன் சத்தியபுத்திரர் என்னும் வேறோர் அரச மரபினரும் குறிக்கப்படுகின்றனர். அச் சத்தியபுத்திரரைத் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த அதிகமானர் என்னும் சிற்றரசக் குடியினராகப் பர். தெ. பொ. மீ. கூறியிருக்கின்றார்.

அதிகமானர் ஒரு பழஞ்சேரர் கிளையைச் சேர்ந்த சிற்றரச ராதலின், அவரைத் தனியே பிரித்துக் கூறத் தேவையில்லை. கடைக்கழகக் காலத்தில் மூவேந்தருக் கடுத்தபடியாக வல்லமை யோடிருந்து, கோசர் என்னும் ஒரு வகுப்பார் தமிழகத்தின் வடமேலைப் பகுதியான துளுநாட்டை ஆண்டு வந்ததாக, எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சிலப்பதிகாரமும் குறிக்கின்றன.

“நாலூர்க் கோசர் நன்மொழி" (குறுந். 15), “ஒன்றுமொழிக் கோசர்’ (குறுந். 73), “மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர்" (அகம். 15), “வடுவுடை முகத்தர் கடுங்கட் கோசர்” (அகம். 90), “காப்புக்கை நிறுத்த பல்வேற் கோசர்” (அகம். 113), “ஒன்றுமொழிக் கோசர்” (அகம். 196), “வாய்மொழி நிலைஇய சேண்விளக்கு நல்லிசை வளங்கெழு கோசர்” (அகம். 205), "பல்லிளங் கோசர்” (அகம். 216), “வெல்கொடித் துனைகா லன்ன புனைதேர்க் கோசர்" (அகம். 251), “ஊர்முது கோசர்" அகம். 262), “வென்வேல் இளம்பல் கோசர்” (புறம். 169), "வலம்புரி கோசர்” (புறம். 283), “நனைக்கள்ளின் மனைக் (புறம்.283), கோசர்" (புறம். 369). "அவையகம் விளங்க நான்மொழிக் கோசர்” (மதுரைக். 508-9), “கடந்தடு வாய்வா ளிளம்பல் கோசர்” (மதுரைக். 773), “அதுகேட்டுக் கொங்கிளங் கோசர் தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழைதொழில் என்றும் மாறாதாயிற்று." (சிலப். உரைபெறு கட்டுரை.)

"கோசம்....துளுநாட் டன்ன” என்று அகநானூற்றுப் பா (15) கூறுவதால் அவர் துளுநாட்டை ஆண்டுவந்தவரென்று தெரிகின்றது. சிலப்பதிகாரம் சேரன், சோழன், பாண்டியன், கயவாகு என்னும் வேந்தரொடு கோசரையுஞ் சேர்த்துக் கூறுவதால், அவர் பெருமை அறியப்படும்.

ஒன்றுமொழிக் கோசர், நன்மொழிக் கோசர், வாய்மொழிக் கோசர் என்று பலவிடத்தும் சிறப்பித்துக் கூறப்பட்டிருப்பது, அவரது சொற்றவ