20
மறுப்புரை மாண்பு
20
மறுப்புரை மாண்பு
(4) எதிர்கால இடைநிலை
"பவ்வ மூவிடத் தைம்பா லெதிர்பொழு திசைவினை யிடைநிலை..
என்றார் நன்னூலார்.
""
(144)
முற்றும் எச்சமுமாகிய செய்யும் என்னும் வாய்பாட்டு எதிர்காலப் பாற்பொது வினை, பால் பிரிந்திசைத்தற்கு வெவ்வேறு விகுதிகளுடன் கூடி நிற்கும் நிலையில் நிலைமொழியீற்று மகரம் வகரமாகவும் சிலவிடத்துப் பகரமாகவும் திரியும். அத் திரிபால் வந்த மெய்நிலையே எதிர்கால இடை நிலையென்றார் நன்னூலார்.
முற்றம் பாலீறும்
எ-கா: செய்யும் + ஆன் = செய்யுமான் - செய்யுவான் -செய்வான் செய்யும் + ஆர் = செய்யுமார் - செய்யுவார் – செய்வார்
+
+
செய்யும் + அ = செய்யும்
=
―
செய்யுவ - செய்வ
உண்ணும் + ஆன் = உண்ணுமான் - உண்ணுவான்
உண்ணும் + ஆன் = உண்ணுமான் - உண்மான் - உண்பான் தின்னும் + ஆன் = தின்னுமான் - தின்னுவான்
தின்னும்
+
ஆன் = தின்னுமான் - தின்மான் – தின்பான்
நடக்கும் + ஆன் ஆன் = நடக்குமான் - நடக்குவான் - நடக்கான் –
நடப்பான்
படிக்கும் + ஆன் = படிக்குமான்
―
படிப்பான்
படிக்குவான் - (படிக்கான்)
படிப்பான் என்பதைப் படிப்பு + ஆன் எனப் பிரிப்பின் நன்றெனத் தோன்றும், ஆயின். தருவான் வருவான் என்பன தருவு+ஆன், வருவு + ஆன் எனப் பிரியாமையின், தொழிற்பெயரும் ஈறுமாகப் பிரிப்பதினும் முற்றும் ஈறுமாகப் பிரிப்பதே நன்றென வறிக. மேலும், செய்து செய்கின்று என்னும் ஏனை யிருகாலப் பண்டை முற்றுகள் போன்றே, செய்யும் என்னும் எதிர்கால முற்றும் பாலீறொடு புணர்ந்ததெனக் கோடல் பொருத்த முடைத்தாம். பெயரெச்சமும் பாலீறும்
எ-கா: செய்யும் + அவன் = செய்யுமவன் செய்யுபவன்
செய்பவன்
செய்யும்
+ அது
செய்யுமது-செய்யுவது-செய்வது
செய்யும் + அவை = செய்யுமவை -செய்யுபவை
செய்பவை.