உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னூல் நன்னுலா?

21


நன்னூல் நன்னூலா?

(6) வடமொழி யாக்கம்

'இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்

றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே

""

“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.'

சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்'

66

எனத் தொல்காப்பியர் கூறியதே மிகையாயிருக்க நன்னூலார்,

"பொதுவெழுத் தானுஞ் சிறப்பெழுத் தானும் ஈரெழுத் தானும் இயைவன வடசொல்.’

டையில் நான்கு மீற்றில் இரண்டும்

அல்லா வச்சை வருக்கமுத லீறு யவ்வாதி நான்மை எவ்வாகு மையைம் பொதுவெழுத் தொழிந்தநா லேழுந் திரியும்"

அவற்றுள்

66

ஏழாமுயி ரிய்யு மிருவுமை வருக்கத் திடையின் மூன்று மவ்வம் முதலும் எட்டே யவ்வும் முப்பது சயவும் மேலொன்று சடவும் இரண்டு சதவும் மூன்றே யகவு மைந்திரு கவ்வும் ஆவீ றையு மீயீ றிகரமும்.'

99

'ரவ்விற் கம்முத லாமுக் குறிலும் லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற் கிய்யு மொழிமுத லாகிமுன் வருமே'

99

இணைந்தியல் காலை யரலக் கிகரமும்

66

மவ்வக் குகரமும் நகரக் ககரமும்

மிசைவரும் ரவ்வழி யுவ்வு மாம்பிற’”

21

(880)

(884)

(885)

(276)

(146)

(147)

(148)

(149)

என வடசொற்கள் கட்டுமட்டும் கங்குகரையுமின்றித் தமிழில் தாராளமாய் வந்து வழங்குமாறு வழிவகுத்துப் பாழ்படுத்தியதுமன்றி, பல தென் சொற்களை வடசொற்களென மயங்கவும் வைத்தார்.

வடசொற்களால் தமிழ் வளம் பெற்றதெனக் கூறுவார், தம் அறியாமையையும் ஆராய்ச்சி யின்மையையும் பகைமையையுமே வெளிப்படுத்துவர். வடமொழியால் தமிழடைந்த கேடு கொஞ்சநஞ்சமன்று. வடசொற்கள், வேண்டாது தமிழிற் புகுத்தப்பட்டன என்பதற்கு, ஊசி(உதீச்சி- வடக்கு), பாசி(ப்ராச்சீ-கிழக்கு), என்ற புறநானூற்றுச் சொற்களே (229 ஆம் பாட்டு) போதுமானவை. சொன் மறைவு, வழக்கு வீழ்ச்சி, ஒலிமாற்றம், பொருட்கேடு ஆகிய நால்வகையிலும், வடசொல்லால் தமிழுக்கு நேர்ந்த