தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி
77
தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி
77
தோன்றிவிட்டதனாலேயே, 2ஆம் நூற்றாண்டில் வையாபுரிப் பிள்ளை போன்ற கொண்டான் அல்லது கோடன் என்னும் குயவன், "ஆரியம் நன்று, தமிழ்தீது” எனவுரைத்து, பரிதிமாற் கலைஞன் போன்ற நக்கீரரால் சாவிக்கவும் பின்னர் உயிர்ப்பிக்கவும் பட்டான்.
11ஆம் நூற்றாண்டில் புத்தமித்திரன் மதவெறியாலும் ஆரியத்திற் கடிமையாலும்,18ஆம் நூற்றண்டில் சுவாமிநாத தேசிகர் ஆரியத்திற் கடிமையாலும் தமிழைக் காட்டிக் கொடுக்க நேர்ந்தது.
இவ் விருபதாம் நூற்றாண்டில், உலக வரலாற்றறிவும் ஒப்பியல் மொழி நூலாராய்ச்சியும் ஆங்கிலக் கல்வியும் பேச்சுரிமை, யெழுத் துரிமையும் மிகுந்திருப்பதால், தமிழைக் காட்டிக்கொடுக்கக் காரணமே யில்லை. ஆயினும், ஆங்கிலத்திற் பட்டக் கல்வியும் சட்டக் கல்வியும் பெற்றும், வேறெம் மொழியிலு மில்லாத பொருளிலக்கணங் கொண்ட தமி ழிலக்கியங் கற்றும், வையாபுரிப் பிள்ளையும் பர். தெ. பொ. மீ.யும் தமிழை வடமொழி வழியதாகக் காட்டியதற்கு,
66
'நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்”
என்பதே காரணமாதல் கூடும்.
(குறள். 373)
பார்த்தமட்டில் தோன்றா அல்லது தெளிவாய்த் தோன்றா என்று பொருள்படும் "விழிப்பத் தோன்றா" என்னும் எளிய தொல்காப்பியத் தொடருக்கு, தோன்றவே தோன்றா (beyond ascertainment) என்று வையாபுரிப் பிள்ளை கூறியதும்,
"மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப புகரறக் கிளந்த அஃறிணை மேன’
99
(மொழி. 49)
என்னும் போலிபற்றிய தொல்காப்பிய நூற்பாவை ஒருமை, பன்மை எண் பற்றியதென்று பர். தெ.பொ.மீ. கூறியதும், மேற்குறித்த குறளாலேயே விளங்கும்.
ஏறத்தாழ மூவாயிரமென்று, ஒருவகையிற் கணிக்கப்படும் உலக மொழிகளுக்குள், தமிழுக்குப் போன்று உட்பகை வேறெதற்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
கொல்குறும்பு
தொன்றுதொட்டுத் தமிழரிடை வதிந்து, தமிழரிடமிருந்தே ஊணுடை யுறையுள் பெற்று, தமிழையே தாய்மொழியாகவும் வாழ் மொழியாகவுங் கொண்டு, தமிழராலேயே முன்னேறி, தமிழர் துணை யாலேயே வாழ்ந்து வரும் தமிழ்நாட்டுப் பிராமணர், செய்ந்நன்றி கொன்று வளர்த்த கடா மார்பிற் பாய்ந்தாற் போன்று தமிழரை யெதிர்த்துப் பிறப்பிலிழிந்தவரென்று தாழ்த்தி,