76
மறுப்புரை மாண்பு
76
மறுப்புரை மாண்பு
தலைமைத் தொழில் வகுப்புகளும், வேளாளரின் பதினெண் பக்கத் தொழில் வகுப்புகளும், பிற்காலத்தில் ஆரியச் சூழ்ச்சியால் பிறப்பொடு தொடர்பு படுத்தப்பட்டு, நூற்றுக்கணக்கான அகமணக் குலங்களாகப் பல்கிக் காற்றிற் பறக்கும் பூளைப் பஞ்சுபோற் பறக்கடிக்கப்பட்டுச் சிறிதும் ஒற்றுமையின்றிச் சின்னபின்னமாகச் சிதையுண்டு போயின. அதோடு கல்வியுரிமையிழந்து, முதற்காலத்தில் நூற்றிற்கிருபத்தைவர் பாவலராயிருந்த தமிழ் இனம் நூற்றிற்குத் தொண்ணூற்றுவர் தற்குறிகளான தொகுதியாகவும் மாறிற்று.
பிறவிக்குலப் பிரிவினைக்குமேல் ஆரிய மத வேறுபாட்டாலும் தமிழர் ஒற்றுமை குலைந்தது. இன்று அரசியற் கட்சிகளால் ஏற்பட்டுள்ள ஒற்றுமைக்கேடு கொஞ்சநஞ்ச மன்று.
இந் நிலையில், தமிழைக் காத்தற்கும் வளர்த்தற்குமென்று தோன்றிய கழகங்களும் ஒன்றுபட்டவையல்ல. மதுரைத் தமிழ்ச்சங்கம், கரந்தைத் தமிழ்ச்சங்கம், திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச்சங்கம், தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழகப் புலவர் குழு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பெங்களூர்த் தமிழ்ச்சங்கம் முதலிய பல்வேறு கழகங்களும் மன்றங்களும் குழுக்களும், பழைய பாண்டியன் தமிழ்க் கழகம்போல் ஒரே அமைப்பக மாக ஒன்றினாலன்றித் தமிழுக்குப் பெருநன்மை செய்தல் இயலாது.
உட்பகை
பழங்காலப் பேதை மூவேந்தரும், ஆரியப் பூசாரியரின் வெண் ணிறத்தால் அவரை நிலத்தேவ ரென்றும், எடுப்பொலியால் அவரது இலக்கிய மொழியைத் தேவமொழியென்றும், முற்றும் நம்பிவிட்டதனால், வடமொழியை வழிபாட்டு மொழியாக உயர்த்தவும் தமிழைத் தாழ்த்தவும் நேர்ந்துவிட்டது. அக் கால வேந்தர் கண்கண்ட தெய்வமாதலாலும், “அரசன் எப்படி, குடிகள் அப்படி என்பதனாலும், புலவர் பலரும் அவரைப் பின்பற்றிவிட்டனர். இங்ஙனம் அரசரும் குடிகளும் ஆரிய வழிப்பட்டதற்கு, ஆரியப் பூசாரியர் சிவனியம் மாலியம் என்னும் இரு தமிழ் மதங்களையும் தழுவி அவற்றைத் தமவென்று ஏமாற்றியதே அடிப்படைக் கரணியம்
ஆரியப் பூசாரியரின் வழியினர் பல அரசியற் பதவிகள் ஏற்றதையும், பாட்டும் கூத்தும் பயின்றதையும், பல தொழிலாளரையும் பிறப்பொடு தொடர்புபடுத்தியதையும், கல்வியைத் தமக்கே உரிமையாக்க முயன்ற தையும், தமிழரைத் தாழ்த்தித் தம்மை உயர்த்தி வந்ததையும், நுண்மாண் நுழைமதித் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் நோக்கி, ஆரியச் சூழ்ச்சி யென்று கண்ட பின்னரே, தமிழர்க்கு விழிப்புணர்ச்சியூட்டத் திருக்குறளை இயற்றினார்.
அக்காலத்தில் உலக வரலாற்றறிவும் மொழிநூலாராய்ச்சியும் இன்மையால், திருவள்ளுவர் மொழித்துறையில் ஆரியத்தை எதிர்க்க வில்லை. ஆயின், அவர் நூலால் தமிழாரிய வேறுபாட்டுணர்ச்சி