உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி

79


தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி

79

இந் நூல், புத்தமித்திரன் இயற்றிய வீரசோழியம், சுப்பிரமணிய தீட்சிதர் இயற்றிய பிரயோக விவேகம், சுவாமிநாத தேசிகர் இயற்றிய இலக்கணக் கொத்து ஆகிய மூன்று தள்ளுபடி நூல்களையும் விழுமிய அளவை நூலாகக் கொண்டு, உண்மைக்கு மாறானவும் தமிழுக்குக் கேடானவுமான முடிபுகளைக் கூறுவது.

தமிழிலக்கணம் வடமொழி வழியதென்று திரித்துக் கூறுவதால், நல்லிசைப் புலவராலும் அடிப்பட்ட சான்றோராலும் உண்மைத் தமிழ ராலும் உயரிய இலக்கண நூலாராலும் உதவாக் கடையென்று ஒதுக்கப்பட்ட கழிசடை நூல்களையே, இந் நூலாசிரியர் கருவி நூல்களாகத் தேடி யெடுத்துக் கொண்டதனால், இவரது மனப்பான்மை எவருக்குந் தெற்றென விளங்கும்.

இவரது இத் திருப்பணிக்கு 40,000 (நாற்பதினாயிரம்) உருபா உதவியது தி.மு.க. அரசே. இங்ஙனம் தமிழனே தமிழனிடம் பெற்ற தமிழ்ப் பணத்தைக் கொண்டு தமிழ்நிலத்திலேயே தமிழுக்குக் கேடான ஒரு போலிப் புன்னூலை யுருவாக்கித் தமிழ்ப் புலவர் முன்பே உலகிடைப் பரப்பியிருப்பதை, உள்ளுந்தொறும் உள்ளஞ் சுடும்.

சமற்கிருத அடிப்படையில் தமிழைக் கற்றுத் தமிழைப் பிறழ வுணர்ந்த இவரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒரு தமிழதிகாரியாக அமர்த்திற்று. அதனால் தமிழுக்கு விளைந்த தீங்கு கொஞ்சநஞ்ச மன்று.

முதலாவது, அப் பல்கலைக்கழகத்தில் என்னால் தொகுக்கப்பட விருந்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலிப் பணி தடுப்புண்டது. அதனால் வெளியேற்றப்பட்டேன். என்னொடு தமிழும் வெளியேறிற்று. அவ் வகரமுதலியைப் பர். தெ.பொ.மீ.யும் தொகுத்தாரல்லர். அவரால் தொகுக்கவும் இயலாது.

இரண்டாவது, கால்டுவெலார் காலம்வரை கையாளப்பட்டு வந்த கொடிவழியியல் மொழிநூல் விலக்கப்பட்டு, அறிவியலல்லாத அமெரிக்க வண்ணனை மொழிநூல் புகுத்தப்பட்டது. கொடிவழியியல் மொழிநூலால் ஆரிய ஏமாற்றுக் குட்டு வெளியாகிவிடும். ஆதலாற் பிராமணர் அதை விரும்புவதில்லை. அதனால், அவர்வழிச் செல்லும் தெ.பொ.மீ.யும் அதைப் புறக்கணித்துவிட்டார்.

மூன்றாவது கிளைமொழியியல் என்னும் பெயரால், செந்தமிழ் மரபை மீறிக் கொடுந்தமிழினுங் கேடான கடுங் கொச்சைச் சொற்களும் உயர்ந்தோர் வழக்கிற் கொப்பாகத் தொகுக்கப்படுகின்றன. இது, கீழோர் பழக்கவழக்கங்களையும் மேலோர் மேற்கொள்ள வேண்டும் என்பது

போலாகின்றது.

நான்காவது, உலக வரலாறு (World History), ஒப்பியன் மொழிநூல் (Comparative Philology), குமுகாயப் பண்பாட்டு மாந்தனூல் (Social and