80
மறுப்புரை மாண்பு
80
மறுப்புரை மாண்பு Cultural Anthropology) என்னும் உலகந்தழீஇய மூவறிவியல்களின் வளர்ச்சி குன்றுகின்றது.
ஐந்தாவது, ஆரியம் என்னும் இலக்கியப் பிராமணியம் வலுத்து வருகின்றது. இதன் விளைவாக, அண்மையில், பதுமா சுப்பிரமணியம் என்னும் பிராமண நடிகையார், தமிழருக்கு நடக்கலையே தெரியாதென்றும், காசுமீரப் பரத முனிவரின் பரத சாத்திரத்தைக் கற்றே அக் கலையை அறிந்தனரென்றும், ஒர் இடுநூல் இட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திற் பண்டாரகர்ப் பட்டம் (Doctroate) பெற்றதாகச் சொல்லப்படுகின்றது. இது, மீன்குஞ்சே தாய்மீனை நீந்தப் பயிற்றியது என்னுங் கூற்றை யொத்தது. இப் பட்டவளிப்பு, அண்ணாமலைப் பல்கலைக்கழக நடப்பேராசிரியரை மட்டு மன்றித் தமிழ்ப் பேராசிரியரையும் ஆட்சிக் குழுவையும் தலைமை யதிகாரி களையும் தாக்குகின்றது. இதனால், முத்தமிழ் என்னும் பெயரே முழுப் பொருளையும் இழக்கின்றது. அரசவயவர் அண்ணாமலைச் செட்டி யார் அவர்களின் தமிழிசைப் போராட்டம் முற்றும் பயனற்றதாகின்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்ச்சிக்குத் தோன்றிய தென்ப தும் தவறாகின்றது. உலகத் தமிழ்ப் புலவர் அனைவரும் அடிமடையரும் அஃறிணையும் ஆகின்றனர்.
ம்
தமிழ் குமரிநாட்டில் தோன்றிய உலக முதற்றாய் உயர்தனிச் செம் மொழி யென்றும், கி.மு. 10,000 ஆண்டுகட்கு முற்பட்ட தலைக் கழகத்தி லேயே முத்தமிழ் தோன்றிவிட்ட தென்றும், தமிழின் 4ஆம் மடித்திரிபான மேலை யாரியத்தின் கிரேக்கப் பிரிவை யொத்த ஒரு மொழியைப் பேசிக்கொண்டு இலக்கியமும் எழுத்துமின்றி முல்லை நாகரிக நிலையில் கி.மு. 1500 போல் இந்தியாவிற்குட் புகுந்து தம் மொழி வழக் கிழந்து, வேதமொழியையும் அதற்குப் பிற்பட்ட சமற்கிருத மொழியையும் இலக்கிய மொழியாகவே கொண்டு, இந்திய மொழிகளையே பேசிவரும் ஆரிய வழியினர் எல்லா வகையிலும் தமிழராலேயே நாகரிகமடைந்து சூழ்ச்சி யாகத் தம்மை யுயர்த்திக் கொண்டு, தமிழ் மூலநூல்களை யெல்லாம் வடமொழியில் மொழிபெயர்த்துக் கொண்டபின் அழித்துவிட்டனர் என்பதை, அறிந்து அம்மையார்க்குக் கொடுத்த பட்டத்தை அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தை மீட்டுக் கொள்ளும் காலம் அண்மையி லிருக்கின்றது என்பதை, இன்று குதித்துக் கூத்தாடிக் குலவிக் காண்டாடிக் கொட்டமடிக்கும் தமிழ்ப் பகைவர் அறிவாராக.
குறிப்பு: தனிப்பட்ட முறையில் பர்.தெ.பொ.மீ. யொடு எனக்கு எட்டுணையும் பகைமையில்லை. அவரை என் உண்மை நண்பர் எனவும் பின்வாங்கேன். ஆயின், அவருக்கும் எனக்கும் பொதுவான தாயைப் பழிப்பதும் முன்னோரைத் தகவிலர் என்பதும் போன்ற கொள்கையையும் கூற்றையுமே வன்மையாய் எதிர்க்கின்றேன்.