தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி
83
தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி
தொல்காப்பியச் சிறப்புப் பாயிர ஆசிரியரான பனம்பாரனார், "செந்தமிழ் வழக்கொடு சிவணிய நிலத்து
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்’
83
என்று, தொல்காப்பிய முதனூல்கள் பலவெனப் பொதுப்படக் குறித்தார். தொல்காப்பிய முதல் நூற்பாவே, “எழுத்தெனப் படுப்”, “முப்பஃ தென்ப” என்று முன்னூலையும் முன்னூலாசிரியரின் பன்மையையும் குறிக் கின்றது. ஆதலால், தொல்காப்பியம் சார்பிற் சார்பான பண்டைப் பன்னூல் தொகுப்பேயன்றிப் புதுப்படத் தோன்றிய தனிநூலன்று.
66
“பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
CC
அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பே ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர்.”
ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே" "மருட்பா பரிபாட் டெனவிரு வகையும் மருவிய கலவைப் பாவென மருவும்
66
வண்ணந் தானே நாலைந் தென்ப.
99
99
வனப்பியல் தானே வகுக்குங் காலை அம்மை அழகு தொன்மை தோலே விருந்தே இயைபு புலனே இழைபென எண்வகை யாமென் றியம்பினர் புலவர். "பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்
பாட்டி னியல பண்ணத்தி யியல்பே.’
""
(தொல்.செய்.78)
(செய்.104)
(செய்.204)
(செய்.178)
இங்ஙனம் பல்வேறு வகைப்பட்ட யாப்பியற் கூறுகட்கும் எடுத்துக் காட்டிலக்கியம், தொல்காப்பியத்திற்கு முந்தியதே யன்றிப் பிந்தியதன் றென்பது வெளிப்படை.
இயைபு என்னும் வனப்பிற்குச் சிலப்பதிகாரமும் மணிமேகலையுமே மூல இலக்கியம் என்பதற்கும் இடமில்லை. அவ் விரு பாவியங்களும் னகர மெய் யொன்றையே பாட்டிறுதியாகக் கொண்டுள்ளன.
ஞகார முதலா னகார வீற்றுப்
புள்ளி யிறுதி இயைபெனப் படுமே
99
(தொல்.செய்.238)
என்பது இயைபிலக்கண மாதலால், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஐம்மெல்லின வீற்றிலும் இற்ற பாட்டுகளைக் கொண்ட ஐவகை இயைபு ட
வனப்பிற்கும்