உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மறுப்புரை மாண்பு


84

மறுப்புரை மாண்பு

மூலவிலக்கியம், தொல்காப்பியத்திற்கு முந்தியதாகவே இருத்தல் வேண்டும். அதுபோன்றே,

66

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்”

(தொல். புறத். 36)

என்னும் ஆற்றுப்படை யிலக்கணத்திற்கும் மூல இலக்கியம், தொல் காப்பியத்திற்கு முந்தியதே யென்பது தானே பெறப்படும்.

பாணினிக்கு முந்திய கி.மு.7ஆம் நூற்றாண்டுத் தொல்காப்பியரும், கி.பி.7ஆம் நூற்றாண்டுபோ லியற்றப்பட்ட பன்னிருபடல ஆசிரியருள் ஒருவரான தொல்காப்பியரும், ஆக இருவர் தொல்காப்பியர் என்று கொள்ள இடமுண்டு. ஆயின், இரு தொல்காப்பியம் இருந்ததில்லை. முற்காலத் தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என்னும் முக்கூறும் பற்றிய இயற்றமிழிலக்கணம் முழுமையும் தொகுத்தவர். அந் நூலே தொல் காப்பியம் என அன்றிருந் தின்றுவரை வழங்கி வருகின்றது. பிற்காலத் தொல்காப்பியர், பர். தெ.பொ.மீ. கூறுகின்றவாறே, பன்னிருபடலத்துள் முதலதாகிய வெட்சிப் படலத்தை இயற்றியவர். ஆற்றுப்படையிலக்கணம் பொருளதிகாரத்தில் பாடாண்திணைக் குரியதேயன்றி வெட்சித் திணைக் குரியதன்று. இனி, வெட்சிப்படலம் இயற்றியவரே பாடாண் படலமும் இயற்றி யிருக்கவும் முடியாது; ஒருகால் இயற்றியிருப்பினும் அதைப் புலவர் தொல்காப்பியத்தோடு மயக்கியிருக்கவும் முடியாது. இறையனா ரகப்பொருளொடு நம்பியகப்பொருளை மயக்குவாரில்லை. அதுபோன்றே இதுவும்.

"இலக்கியங் கண்டதற் கிலக்கணம் இயம்பலின்'

"இலக்கிய மின்றி யிலக்கண மின்றே

(நன். 141)

(பேரகத்)

என்பதனால், இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திற்கு முன் எத்துணையோ இலக்கிய வனப்புகள் இருந்திருத்தல் வேண்டும்.

இனித் தொல்காப்பியத்தில் சில ஆரியக் கருத்துகளும் குறிப்புகளு மிருப்பதால், தனித்தமிழ் நூல்களெல்லாம் அதற்கு முற்பட்டே யிருந்து இயற்கையாலும் செயற்கையாலும் அழியுண்டிருத்தல் வேண்டும்.

ஆயின் பர். தெ.பொ.மீ. தொல்காப்பியத்தையே தமிழ் முதனூலாக வும், ஆற்றுப்படை யிலக்கணத்தைப் பத்துப்பாட்டிற்குப் பிற்பட்டதாகவும், தொல்காப்பியரை அகத்தியருக்கு முந்தியவராகவும், காட்டியிருப்பதால், அவர் காலத்திற்குமுன் மூவேந்தராட்சியும் புலவர் பாணர் கூத்தர் பொருநர் விறலியர் முதலியோர் வாழ்க்கையும், தமிழிலக்கிய விலக்கணமும் தமிழ நாகரிகமும் இருந்ததில்லையென்றே, ஆராய்ச்சியில்லார் கருத வைத்துள்