உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மறுப்புரை மாண்பு


86

மறுப்புரை மாண்பு

'உடம்படு மெய்யே யகார வகாரம் உயிர்முதன் மொழிவரூஉங் காலை யான

எனவும்,

இறுதியு முதலும் உயிர்நிலை வரினே

உறுமென மொழிப உடம்படு மெய்யே'

எனவும் கூறினாராகலின்.'

ம்

முதலகத்தியர் பாரதக் காலத்திற்கு முந்திய இராமாயண காலத்தவ ராதலால், கி.மு. 12ஆம் நூற்றாண்டினரா யிருந்திருக்கலாம்; இரண்டாம் அகத்தியர் கி.பி. 7ஆம் நூற்றாண்டினரா யிருந்திருக்கலாம்; என்பது முன்னர்க் கூறப்பட்டது. ஆகவே, கி.மு. 7ஆம் நூற்றாண்டினரான முதல் தொல்காப்பியர் அவ் விருவர்க்கும் இடைப்பட்டவராவார்.

தமிழின் தொன்மை தென்மை முன்மை முதலிய தன்மைகள் அதன் தாய்மையையும் தலைமையையும் காட்டுவதால் அவற்றை மறைத்தற் பொருட்டு, பர். தெ.பொ.மீ. முதலகத்தியரைத் தமிழொடு தொடர்புபடுத்தாது விட்டுவிட்டு, தொல்காப்பிய உடம்படுமெய்ந் நூற்பாவுரையில் நச்சினார்க் கினியர் முதனூல் நூற்பாக்களாக எடுத்துக் காட்டிய மேற்கோள் இரண்டை யும், ஓர் அகத்தியருடையனவென்று சான்றில்லாது கொண்டு, தொல் காப்பியர் காலத்தில் வழக்கூன்றாத உடம்படுமெய்யைத் தம்காலத்தில் வழக்கூன்றியதாகக் கூறும் அகத்தியர் தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்டவர் என்று துணிந்து கூறியுள்ளார்.

குமரி நாட்டு முதற்காலத் தமிழில் உடம்படுமெய் எழுத்து மொழியிற் குறிக்கப்படாதிருந்திருக்கலாமேனும், தலைக்கழகமும் இடைக்கழகமுந் தாண்டிவந்த தொல்காப்பியர் காலத்தில் அது வழக்கூன்றாதிருந்த தென்பது பொருந்தாது.

மேலும், “உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்” என்னும் தொல்காப்பியர் கூற்று, அக்காலத்திற் புதிதாகத் தமிழ் கற்ற ஆரியப் புலவர் சிலரின் தவற்றைக் கண்டித்ததாகவும் இருக்கலாம்.

உடம்படுமெய் கொளல்வரையார் என்று கூறாது, “உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்" என்று கூறியது, உடம்படுமெய் எழுத்து மொழியிற் குறிக்கப்படாவிடினும், ஒலிப்புமொழியில் இயல்பாக இருக்கவேயிருக்கின்றது என்னும் உண்மையை நுண்ணிதின் உணர்த்துதல்

காண்க.

நச்சினார்க்கினியர், உடம்படுமெய் நூற்பாவுரையில் தாம் எடுத்துக் காட்டிய மேற்கோட்கு ஆசிரியர் பெயர் அல்லது நூற்பெயர் குறியாமை மட்டுமன்றி, இருவேறு முதனூலினின்று எடுத்துக்காட்டி யிருப்பது பர். தெ. பொ. மீ. கூற்றைப் பொருளில் தாக்கும்.