தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி
87
தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி
66
87
'முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்" என்னும் சிறப்புப் பாயிரமும், “என்ப”, “என்மனார் புலவர்,” “நுண்ணிதி னுணர்ந்தோர் கண்ட வாறே," "எனமொழிப," "உணரு மோரே" "வரையார்,” “என்றிசி னோரே” என்றெல்லாம் ஆசிரியர் நெடுகலுங் கூறிச் செல்லும் பெருவழக்கும், தொல்காப்பிய முதனூல்களின் பன்மையை மட்டுமன்றி, அவற்றுட் பலவற்றின் பெயர் அறியப்படாது போனமையையும் குறிப்பாய்த் தெரிவிக்கும்.
இனி,
சு
"வினையெஞ்சு கிளவிக்கும் முன்னிலை மொழிக்கும் நினையுங் காலை அவ்வகை வரையார்'
"கொடிமுன் வரினே ஐஅவண் நிற்பக்
கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி
99
(தொல். உயிர். 62)
(தொல்.உயிர். 83)
என்னும் நூற்பாக்களை நோக்கின், “வரையார்" என்பது முற்கால நிலைமை யுணர்த்தும் ஒரு சிறப்புக் குறிப்புச் சொல்லன்றென்பதும் தோன்றும். அதனால், நச்சினார்க்கினியர், “நீக்கார் கொள்வர்” என்றே பொருள் கூறி யமைந்தார்.
தொல்காப்பியத்திற்கு முந்திய மூல நூல்களெல்லாம் உடம்படு மெய்யைத் திட்டவட்டமாகக் கூறியிருப்பதால், தொல்காப்பியமும் அத்தகையதேயெனக் கொள்வதே தக்கதாம். கால் மாத்திரை யொலிக்கும் ககரக் குறுக்கத்தையும் மகரக் குறுக்கத்தையும் நுண்ணிதா யுணர்ந்த முன்னைத் தமிழறிஞர், உடம்படுமெய் கண்டறிந்தாரென்பது இம்மியும் வியத்தற்குரியதன்று.
சேனாவரையர், பெருந்தேவனார் முதலிய உரையாசிரியரும், புத்தமித்திரன், சுப்பிரமணிய தீட்சிதர், சுவாமிநாத தேசிகர், வையாபுரிப் பிள்ளை, பர். தெ. பொ. மீ. முதலிய நூலாசிரியரும், கொண்ட சமற்கிருத மயக்கமும் தமிழிகழ்வும் அடுத்த கட்டுரை மறுப்புகளில் தெளிவாக விளக்கப்பெறும்
2ஆம் அதிகாரம்
கூற்று: தொல்காப்பியக் காலம் (Age of Tolkappiam)
தொல்காப்பியமும் சமற்கிருதமும்
“தொல்காப்பியம், சமற்கிருதச் சொற்கள் திரிக்கப்பட்டுத் தமிழிலக்கி யத்தில் வழங்கி வந்ததை நோக்குகின்றது. (தொல். 880, 884, 885. கழகப் பதிப்பு, 1954). தொல்காப்பியரே சமற்கிருதச் சொற்களை ஆண்டிருப்பதைப் பிரயோக விவேகம் குறிப்பிடுகின்றது. ஏற்கெனவே வேறோரிடத்திற் குறிப்பிட்டுள்ளவாறு கருத்துவேறுபாடுக ளிருந்தன வேனும், ஒலியியலும் லக்கணமும்பற்றி ஓர் அனைத்திந்தியக் கொள்கையிருந்தது. தொல்