தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி
89
தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி
89
கலைப்
திருத்தவுரையை இயற்றினார். அவர் தமிழரையும் அவர் பண்பாட்டையும் நன்றாய் அறிந்திருந்தார். அவர் வார்த்திகங்களுள் ஒன்று சோழ பாண்டியங்களைக் குறிப்பிடுகின்றது. சோழபாண்டியம் என்பது, குருபாஞ்சாலம் என்பது போன்றே அரசரையும் அவர் நாட்டையுங் குறிக்கும். ஆதலால், கி.மு. 4ஆம் நூற்றாண்டில் அல்லது ஒருகால் 5ஆம் நூற்றாண்டில், தொலைவிலுள்ள வடவர்க்கும் தென்றிசைத் தமிழர்க்கும் இடையே கலைப் பண்பாட்டுத் தொடர்புகள் வளர்ச்சியடைந் திருக்கலாம். னால், தொல்காப்பியம் நெருங்கிய தொடர்பை அதினும் பேரளவிற் காட்டுகின்றது. எங்ஙனமிருப்பினும், ஒருவர் தொல்காப்பியத்தைக் கி.மு. 4ஆம் நூற்றாண்டிற்கு முந்தியதாகக் கூற முடியாது." (பக். 17-18).
மறுப்பு
“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே
CC
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
"சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்'
(தொல். எச். 1)
(தொல்.எச். 5)
(தொல். எச். 6)
என்னும் தொல்காப்பிய நூற்பாக்கள், பாண்டியரின் இரண்டாம் தலைநகர் முழுகி இரண்டாம் தமிழ்க் கழகமும் குலைந்து, தூய தமிழ்க் காவலரின்றித் தமிழ் ஆரியர் வயப்பட்டுப்போன காலத்தில், ஆரியம் வேரூன்றிய சேர நாட்டில் வாழ்ந்த தொல்காப்பியர், செந்தமிழ் மரபையும் சொல் வளத்தையும் ஒருங்கே சிதைத்து நாளடைவில் தமிழை ஆரிய வண்ண மாக்கும் பொருட்டு, ஆரியத் தமிழ்ப் பகைவர் தமிழில் வேண்டாது புகுத்திய ஒருசில தொடக்க வடசொற்களை அயற்சொற்களென்ற வகையில் குறித்ததைக் காட்டுமேயன்றி, அச் சொற்கள் தமிழுக்கு இன்றியமையாதன வென்றும், அவற்றால் தமிழ் வளம் பெற்றதென்றும், உணர்த்தா.
பிராமணியம் தமிழரின் தாய்மொழிப் பற்றையும் உணர்ச்சியையும் பெரும்பாலுங் கொன்றுவிட்டதனால், அயன்மொழியாரின் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் ஒருசில அயற்சொற்களையும் வழக்கிற் புகுத்திக் கொண்டனர். சன்னல் (ஜன்னல்), சாவி என்பன போர்த்துக்கீசியச் சொற்கள். ஆயின், அவை தமிழ்ச்சொற்களை வழக்கு வீழ்த்தித் தூய தமிழ்ச்சொற்கள் போன்றே வழங்கிவருகின்றன. அவற்றுள், முன்னது பலகணி, சாளரம், காலதர் என்னும் மூன்று அழகிய தமிழ்ச்சொற்களையும், பின்னது திறவுகோல், துறப்புக்குச்சு, தாழக்கோல் என்னும் மூன்று தெளிபொருட் சொற்களையும், இலக்கியச் சொல்லும் அருஞ்சொல்லும் ஆக்கியுள்ளன. இதனால், போர்த்துக்கீசியச் சொற்கள் தமிழுக்கு இன்றியமையாதன வென்றும், போர்த்துக்கீசியமே தமிழுக்கு மூலமென்றும், ஒருவரும் சொல்லத் துணியார். இங்ஙனமே வடசொல் நோக்கியும் உணர்க.