உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மதுரைத் தமிழ்க் கழகம்

புலவர் தகுதி

101

ஒரு தமிழ்ப்புலவர் கல்லூரியில் மாணவராகப் பயின்றோ தனியாக ஒரு பெரும் புலவரிடம் கற்றோ, பல்கலைக்கழகங்கள் நடத்தி வரும் தேர்வெழுதித் தேறிப் புலவர் பட்டம் பெற்றவர்க்குள், நுவலாசிரியராகவோ (போதகாசிரியராகவோ), நூலாசிரியராகவோ, உரையாசிரியராகவோ, இதழாசிரியராகவோ, ஆராய்ச்சியாளராகவோ பல்லாண்டு பணியாற்றி அவரவர் துறையில் அதிகாரியென அறிஞரால் ஒப்புக்கொள்ளப்பட்டவரே, தமிழ்ப்புலவர் கழக வுறுப்பினராகத் தக்கார்.

இலக்கண அறிவும் புலவர் பட்டமும் இன்றியமையாத அடிப்படைத் தகுதியாகும். ஆங்கிலத்திற் பட்டம் பெற்றவரையே ஒப்புக்கொள்ளும் முறையைத் தமிழிலும் கடைப்பிடித்தல் வேண்டும். மேடைப் பேச்சாள ராகவோ இதழாசிரியராகவோ இருந்தால் மட்டும் போதாது. இலக்கண அறிவிற்குப் பல்கலைக்கழகப் புலவர் பட்டமே சான்றாதல் வேண்டும். தேர்வெழுதாது பெறும் கண்ணியப் (Honorary) பட்டமும் சான்றாகாது. வரிசையறிதல்

புலமைச் சான்றான பல்வேறு திறங்களுள், கடைக்கழகச் செய்யுட்கும் பனுவற்கும் உரை வரையும் ஆற்றல் சாலச் சிறந்தது. நாவலர் வேங்கடசாமி நாட்டாருக்குப் பின் அடுத்தபடியாக அத் திறமையுடையார், முதுபெரும் புலவர் உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிப்பிள்ளையே. அவரைத் தலைவராகக் கொண்டு புலவரைத் தேர்ந்தெடுப்பது தலைசிறந்த வகையாகும். "புலமிக் கவரைப் புலமை தெரிதல்

புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க பூம்புன லூர பொதுமக்கட் காகாதே பாம்பறி யும்பாம்பின் கால்.'

99

(பழ. 7)

அவருக்கு அடுத்தவர் முதுபெரும் புலவர் வேணுகோபாலப்

பிள்ளையே.

தமிழ்ப்புலவருள், வையாபுரி வழியினர்(Heretic School) என்றும், மறைமலையடிகள் வழியினர்(Orthodox School) என்றும், இரு முரண்பட்ட கூட்டத்தார் உளர். மறைமலையடிகள் போல் முற்றும் தனித்தமிழே வழங்க வேண்டும் என்பதை எவரும் மறுக்கலாம். ஆயின், உண்மையான வரலாற்றை ஒருவரும் மறுக்கவோ மறைக்கவோ மாற்றவோ ஒண்ணாது. ஆதலால், சமற்கிருதத்திலிருந்து தமிழ் வந்ததென்றும், அடிப்படைத் தமிழ்ச்சொற்களெல்லாம் சமற்கிருதமென்றும், பாணினீயத்தின் வழிப் பட்டது தொல்காப்பியம் என்றும், சிந்துவெளி நாகரிகம் ஆரியர தென்றும், இருக்கு வேதத்திற்குப் பிற்பட்டது தமிழ் என்றும், தமிழர் வடமொழிப் பரத