உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு

111

தமிழ்நாட்டு அரசிலும் பல்கலைக்கழகங்களிலும் தமிழே தலைமை யாகவும்(Main), சமற்கிருதம் கீழ்த்துணையாகவும் (Subsidiary) வழங்குதல் வேண்டும்.

தமிழ்நாட்டுத் திருக்கோயில் வழிபாடு, தமிழிலேயே தமிழப் போற்றிமாராலேயே நடைபெறல் வேண்டும். பாரதக் காலத்திற்குப் பின்னரே, பிராமணர் தமிழ் வழிபாட்டு மரபை மாற்றி வடமொழி வழிபாட்டை வஞ்சகமாகப் புகுத்தும் ஆகமங்களைத் தோற்றுவித்துள்ளனர் (History of the Tamils, pp. 105-12). இந்திய வொன்றிய நடுவணரசு, சமற்கிருதம், அரபி, பாரசீகம் ஆகிய மும்மொழித் தலைமைப் புலவர்க்கும் ஆண்டுதோறும் வழங்கும் பரிசையுஞ் செய்யுஞ் சிறப்பையும் தமிழ்ப் புலவர்க்கும் வழங்குதலும் செய்தலும் வேண்டும்.

இவையெல்லாம் நிகழ்ந்த பின்னரே தமிழ்நாடு உண்மையான விடுதலை பெற்றதாகும். ஆங்கில ஆட்சி நீக்கத்தால் தமிழ்நாடு பேரடிமைத் தனமே பெற்றுள்ளது.

தமிழ் வாழ்க! தமிழ்ப்பகை வீழ்க!

தமிழ்நாட்டு முதலமைச்சர் கையைத் தவ வலுப்படுத்துக.

E

"செந்தமிழ்ச் செல்வி" திசம்பர் 1980