உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




17

தமிழனின் பிறந்தகம்

ஒரு வீட்டிற்கு ஆவணம் போன்றே, ஒரு நாட்டிற்கு வரலாறு உரிமைச் சான்றாகும். ஆயின், ஓர் ஆவணத்தில் எதிரிகளால் ஏதேனும் கரவடமாகச் சேர்க்கப்படலாம். அதுபோன்றே, ஒருநாட்டு வரலாறும் பகைவரால் அவர்க்கேற்றவாறு மாற்றப்படலாம். ஆதலால், இவ் விரு வகையிலும், உரிமையாளர் விழிப்பாயிருந்து தம் உரிமையைப் போற்றிக்

காத்துக்கொள்ளல் வேண்டும்.

தமிழக வரலாறு, ஆரியர் தென்னாடு வந்ததிலிருந்து கடந்த மூவாயிரம் ஆண்டாக மறைக்கப்பட்டும் மாற்றப்பட்டும் வந்துள்ளது. இதன் உண்மையான நிலைமையை அறிதற்கு, இந்திய வரலாற்றைத் தெற்கினின்று தொடங்கல் வேண்டும். இந்திய வரலாற்றுத் தந்தையாகக் கருதப்படும் வின்சென்று சிமிது (Vincent Smith), தம் 'இந்திய முந்திய வரலாறு' (Early History of India) பொத்தகத்தில், பேரா. சுந்தரம் பிள்ளையின் கூற்றைப் பின்வருமாறு எடுத்துக் கூறியுள்ளார்:

INDIA PROPER IN THE SOUTH

``The attempt to find the basic element of Hindu civilization by a study of Sanskrit and the history of Sanskrit in Upper India is to begin the problem at its worst and most complicated point. India, South of the Vindhyas the Peninsular India-still continues to be India Proper. Here the bulk of the people continue distinctly to retain their pre-Aryan features, their pre-Aryan languages, their pre-Aryan social institutions. Even here, the process of Aryanization has gone indeed too far to leave it easy for the historian to distinguish the native warp from the foreign woof. But. if there is anywhere any chance of such successful disentanglement, it is in the South: and the farther South we go the larger does the chance Grow.

The scientific historian of India, then, ought to begin his study with the basin of the Krishna, of the Cauvery, of the Vaigai, rather than with the Gangetic plain, as it has been, now long, too long, the fashion."

- (Tamilan Antiquary, No. 2 (1908), p.4.)