உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழனின் பிறந்தகம்

117

``Certain investigators assume that everything Indian must have been imported at some remote times from outside India. They hold that the speakers of primitive Tamil and other South Indian languages, to whom they give the name of the Dravidian race, must have settled in India from Central Asia. These theorists drag large bodies of ancient along the map of Asia and Europe as easily as chessmen are shifted on the chess-board, and make them wander aimlessly from country to country, merely to support their baseless theories. It happens that certain words of the Brahui dialect of Baluchistan resemble certain Tamil words. To explain this solitary fact, which is susceptible of various interpretations, they will have it that an ancient Dravidian race, evolved somewhere outside India in the Asiatic highlands, undertook a pilgrimage to India through the North-western Gate, and reached the extreme South through strange and devious ways. Foote constructs an itinerary for the wandering of these peoples, which is a specimen of perverse ingenuity without any historicl evidence to support it. Surely the Neolithians of India were not dumb animals, but spoke languages of their own. The simplest hypothesis under the circumstances is, as Tamil traditional history holds, that the Tamils and other allied peoples were indigenous and their languages were evolved where they are now spoken"

(Stone Age in India by P.T. Srinivasa Iyengar, pp. 46-7)

பேரா. வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் ஆங்கிலத்தில் எழுதிய 'வரலாற்று முன்னைத் தென்னிந்தியா' (Pre-Historic South India), தமிழர் தோற்றமும் பரவலும்' (Origin and Spread of the Tamils) என்னும் இரு வரலாற்று நூல்கள், தமிழர் குமரிநாட்டில் தோன்றிப் பாரெங்கும் பரவியதை நடுநிலையாகவும் மறுப்பிற் கிடமின்றியும் விளக்கிக் கூறுகின்றன.

வடநூல்களுள், சதபத பிராமணம், ஒரு தென்திசைக் கடல் கோளுக்குத் தப்பிய பாண்டியனைத் திரவிடபதியென்று குறிக்கின்றது.

மொழியியற் சான்றுகள்

1. தமிழும் அதன் திரிபான திரவிட மொழிகளும் இந்தியாவிற் குள்ளேயே வழங்குதலும், அவற்றுள் இலக்கியமுள்ள முதன்மையான நான்மொழியும் தென்னிந்தியாவிற்குள்ளேயே வழங்குதலும், அவற்றுள் ளும் தலைமையான தமிழ் தென்கோடியில் வழங்குதலும், அதன் வழக்கும் தெற்கிற் சிறந்திருத்தலும், வடக்கே செல்லச் செல்ல ஏனைத் திரவிட மொழிகள்

இலக்கணமின்றியும் இலக்கிய மின்றியும் பண்பாடின்றியும் சொல்வளமின்றியும் கொச்சையாகியும் மேன்மேலும் சிறுத்தும் சிதைந்தும்