உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




118

செந்தமிழ்ச் சிறப்பு கலவையாகியும் போவதும், இந்தியாவிற்கு வெளியே சிதைந்த தமிழ் அல்லது திரவிடச் சொற்களன்றி மொழியேதும் வழங்காமையும்.

2. இந்தியின் அடிப்படைச் சொற்கள் சிதைந்த தென் சொல்லா யிருத்தல்.

முதல் கருப்பொருட் சான்றுகள்

1. கால வேறுபாடும் இயற்கை நிலைமைகளும் உயிரின வகைகளும் விளைவுப் பொருள்களும் தொன்றுதொட்டு மாறாதிருந்து வருதல்.

2. சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள காரோதிமம் (காரன்னம்) இன்று ஆத்திரேலியாவிலும் தாசுமேனியாவிலும் மட்டும் இருத்தலும், தென்றிசைப் பெயருக்குக் காரணமான தென்னைமரம் தென்கிழக்குத் தீவுகளில் மட்டும் இயற்கையாக வளர்தலும்.

மறுப்பிற்கு மறுப்பு

மேனாட்டு இடப்பெயரீறுகட்குத் தமிழிலேயே பொருளிருத்தலாலும், குமரி நாட்டிலிருந்து நண்ணிலக் கடற்கரை நாட்டிற்கு முதற்கண் சென்ற மக்கள் நீள்மண்டையரா யிருந்ததனாலும், ஊர் என்னும் மருதநிலக் குடியிருப்புப்பெயர் குமரிநாட்டிலேயே தோன்றியமையாலும், பருங்கற் கட்டட அமைப்பே சிறுகற் கட்டட அமைப்பிற்கு முந்துவது இயற்கையாத லாலும், இலாகோவாரி (Lahovary), பாலகிருட்டிணன் நாயர் முதலியோர் தமிழின் அல்லது தமிழரின் தொன்மையை மறுப்பது அறியாமை பற்றியதே யென்று கூறி விடுக்க.

முடிந்த முடிபு

தமிழ், தென்னாட்டிற்கும் தெற்கில் தென்மாவாரியில் முழுகிக் கிடக்கும் தென்கண்டத்தின் தென்கோடி நாடான தென்பாலியில் தோன்றிய தென்மொழியே. அதனால், அதைத் தோற்றி வளர்த்த தமிழன் பிறந்தகமும் அத் தென்புலமே.

அை

இவ் வடிப்படையிலேயே, தமிழின் அமைப்பும் அதன் திரவிடத் திரிபும் ஆரிய வேறுபாடும் தெளிவான விளக்கம் பெறுகின்றன. இவ் வுண்மையை அறியாதார் அல்லது உணராதார் தமிழின் இயல்பை மட்டுமன்றி ஒப்பியன் மொழிநூலையும் அறியாதவரே யாவர்.

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர் 1981; செ.செ. பெப்பிரவரி 1981