உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

66

செந்தமிழ்ச் சிறப்பு

4. குதிரைச்சாலை (பிங்.). 5. குகை. அரிமந் திரம்புகுந்தால் (நீதிவெண். 2).

மந்திரம் - (வ.) மந்திர

மண்டுதல் = வளைதல், மண்டியிடுதல் = காலை மடக்குதல், மண்டு மண்டலம் = 1. வட்டம், 2. வட்டாரம் 3. நிலப்பகுதி, 4. காலப்பகுதி (40 அல்லது 48 நாள்) 5. நூற்பகுதி 6. வேதநூற் பகுதி.

மண்டுதல் = 1. நெருங்குதல், 2. கூடுதல், 3 நிறைதல். மண்டு - மண்டகம் = மக்கள் கூடும் கூடம்.

மண்டகப்படி என்னும் வழக்கை நோக்குக.

மண்டகம் மண்டபம்.

ஒ.நோ. வாணிகம் - வாணிபம். மண்டபம் - (வ) மண்டப.

முன் கூட்டம்.

மன் =

=

சிறப்பாகக் கருதியறியும் மாந்தன், மன்பதை மக்கட்

OE. man, OS., OHG, man, Goth. manna,

Skt. மனு

மனுஷ்ய - (மனுடன், மானிடன், மனிதன்)

இங்ஙனம், சமற்கிருதச் சொற்களுள் ஐந்தி லிருபகுதி தமிழ். சமற்கிருதத்திலும் ஏனையாரிய மொழிகளிலும் உள்ள சுட்டுச் சொற்கட் கெல்லாம் மூலம், அ,இ,உ ஆகிய தமிழ் முச்சுட்டுகளே.

கிறித்துவிற்கு முற்பட்ட காலத்திலேயே, ஆரியப் பூசாரியர் தம்மை நிலத்தேவரென்றும் தம் இலக்கிய மொழியைத் தேவமொழியென்றும் சொல்லி, பல்வேள்விச்சாலை முதுகுடுமிப் பெருவழுதி, இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பல்யானைச் செல்கெழு குட்டுவன் போன்ற மூவேந்தரை யும் ஏமாற்றி, ஆகமங்களை எழுதி வைத்துக்கொண்டனர். அவை அறிவாராய்ச்சி மிக்க இக்காலத்திற் செல்லா.

நாடு தமிழ்நாடு. மக்கள் தமிழ்மக்கள். மதம் தமிழர் மதம். கோவில் தமிழரசர் அல்லது திரவிட அரசர் அல்லது தமிழ் நாட்டரசர் கட்டியவை. அவற்றிலுள்ள தெய்வப் படிமைகள் தமிழக் கம்மியர் செதுக்கியவை. எந்நாட்டிலும் தாய்மொழியில் வழிபாடு செய்வதே, இயல்பும் முறைமையும் பயன்படுவதும் இறைவனுக்கு ஏற்புமாகும். சமற்கிருதம் அயன்மொழியும், பெரும்பாலும் தமிழ்க் கலப்பா லானதும், தமிழை ஒழிக்க வேண்டுமென்றே புனையப்பட்டுக் கரவாகப் புகுத்தப்பட்டதும், எங்கேனும் என்றேனும் வழங்காது இலக்கிய மொழியாகவே யிருந்து வருவதும், தமிழர்க்கு இம்மியும் பொருள் தெரியாததும், ஆரியப் பூசாரியர்க்கும் தெளிவாய் விளங்காததும், தமிழர் முன்னேற்றத்திற்கு வலுத்த முட்டுக்கட்டையானதும், தமிழின ஒற்றுமையைக் குலைப்பதும், அவரது அடிமைத்தனத்தை நிலைநிறுத்துவதுமான போலிமொழி யாதலால், திருக்கோவில் தமிழ்

"