உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை வேட்கை

125

பெய்தல் என்ற சொல் கொச்சை வழக்கில் பேய்தல் என்று வழங்கும். அதனால், “பேய்ந்துங் கெட்டது, ஓய்ந்துங் கெட்டது” என்னும் பழமொழி எழுந்தது.

பேய் பேயு-பேசு பேச்சு.

பேசு - (வ) பாஷ் (bhash) - பாஷா

ஒ.நோ. : தேய்-தேயு-தேசு

(வ.) தேஜஸ். தேசு - (இ.) தேஜ்.

கொச்சை வழக்கினின்றும் செஞ்சொல் அல்லது இலக்கணச் சொல்

பிறப்பதுண்டு.

எ-டு : கொண்டுவா

கொண்டா கொணா

கொணர். கொண்டா

என்பது கொச்சைச் சொல்லாகவும், கொணா, கொணர் என்பன செஞ்சொல்லாகவும், கொள்ளப்படுதல் காண்க.

இனி, ஆரிய முதனூலானதும், இறைவனாலும் இயற்றப்படாது என்றுமுள்ளதாகச் சொல்லப்படுவதுமான வேதத்தின் பெயரே, தென் சொல்லின் திரிபாயிருப்பது, சிறப்பாகக் கவனிக்கத் தக்கதும் மிக மகிழ்ச்சி தருவதுமாகும்.

விழித்தல் = 1. கண்திறத்தல், 2. கவனித்துப் பார்த்தல், 3. அறிதல், 4. விளங்குதல், 5. தெளிதல்.

விழி = 1. கண் 2. அறிவம் (ஞானம்). "தேறார் விழியிலா மாந்தர்' (திருமந். 177)

விழி - L. vide, Gk. (w)eid. OE. wit, Skt. வித்.

வித் - வேத = அறிவு, அறிவு நூல், மறை.

செவியுறுதல்

=

கேட்டல்.

செவியுறு - (வ.) ச்ரு - ச்ருதி = 1. கேள்வி, 2. கேட்டறியப்படும் வேதம். முன்னுதல் = கருதுதல், AS. mun (to think)

முன்னம் = 1. கருத்து, 2 கருதும் மனம் (திவா.).

முன் முன்னம் - முனம் - மனம். (வ.) மனஸ். L. mens, E.mind. மன் + திரம் = மந்திரம் = 1. கருதுந்திறம் 2. (திண்ணிய) எண்ணம் (பிங்.) 3. சூழ்வு, 4. நிறைமொழியான மறைமொழி. (தொல். செய், 176).5. திருமூலர் திருமந்திரம் 6. பேய்வினை மறைமொழி. (வ.) மந்த்ர. மன்னுதல் = பொருந்துதல், கூடுதல், நிலைபெறுதல்.

மன்

மன்று - மந்து - மந்தை

=

மன் – மனை. மன் + திரம் = மந்திரம் = 1. வீடு. “மந்திரம் பலகடந்து (கம்பரா. ஊர்தேடு. 138) 2. அரண்மனை (பிங்.). 3.திருக்கோவில் (பிங்.).