உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

செந்தமிழ்ச் சிறப்பு

கம் கம்மியம்

=

1. கைத்தொழில், 2. கம்மாளத்தொழில், 3. கட்டடத்தொழில் (வ.) கர்மண்ய.

கம்மியன் = 1. தொழிலாளி “கம்மியரும் ஊர்வர் களிறு" (சீவக. 495) 2. கம்மாளன் 3. கற்றச்சு.

கம்மிய நூல் = கட்டட நூல் (சிற்ப சாஸ்திரம்) “கம்மியநூற் றொல்வரம் பெல்லை கண்டு” (திருவிளை. திருநகரங். 38)

கம்மக்குடம் = கன்னான் செய்த குடம் (நன். 222, மயிலை).

கம்மகாரர் = 1. கலத்தச்சர் 2. கப்பலோட்டிகள். "கம்மகாரர் கொண்டாடும்படி நன்றாக ஓடிற்று" (சீவக. 501, உரை)

கரு என்னும் முதனிலையைக் ‘க்ரு' என்று திரிப்பர் வடமொழி யாளர். ஒ.நோ. : துரு (துருவு) - (வ.) த்ரு. பெரு (வ.) ப்ருஹ்.

பொறு - (வ.) ப்ரு (bhru).

செய் = சிவப்பு. செய்ய = சிவந்த செய்யன் = சிவந்தவன், சிவன். கருத்தல், செய்தல் என்னும் இரண்டும் உறவியற் சொற்கள் (Relative terms)

கரு

கருவி = கருமஞ் செய்வதற் கேதுவான துணைப்பொருள். இச் சொல் வடமொழியில் இல்லை.

கரு + அணம் = கரணம் = 1. செய்கை. 2. கருவி. இச் சொல்லினின்று காரண, கார்ய என்னும் இரு சொற்களைப் பிறப்பித்துள்ளனர் வடமொழியாளர். இவை மேலையாரிய மொழிகளுள் ஒன்றிலுமில்லை.

கருத்தல், செய்தல் என்னும் இருவினைகளும், வெளுத்தல் (சலவை செய்தல்) என்பதுபோல, தன்வினையாகவும் பிறவினையாகவும் ஆளப்பெற்றன.

சமற்கிருதம் என்னும் மொழிச் சிறப்புப் பெயர் மட்டுமன்றிப் பாஷை (பாஷா) என்னும் பொதுப்பெயரும் தென்சொல் திரிபே.

ஒருவர் வாயினின்று சொற்கள் வருவது, ஒரு துளையினின்று நீர் ஒழுகுவதும் வானத்தினின்று மழை பெய்வதும் போன்றிருக்கிறது. நீரொழுக்குச் சிறுத்திருப்பின் பெய்தல் என்றும், திரண்டிருப்பின் பொழிதல் என்றும் சொல்லப்படும். அங்ஙனமே, ஒருவர் கடல்மடை திறந்தாற்போல் தட்டுத்தடையின்றிப் பேசின், கோடை மழைபோற் பொழிகிறார் என்று சொல்வது வழக்கம். அதுபற்றியே சொற்பொழிவு என்னும் கூட்டுச் சொல்லும் தோன்றிற்று. ஆகவே, விரைந்து பேசுவது பொழிவதும் விரைவின்றிப் பேசுவது பெய்வதும் ஆகும் என்பது பெறப்பட்டது.