உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை வேட்கை

123

Cum (கும்) என்பது இலத்தீன் மொழியில் ஒரு கூட்டிணைப்புச் சொல் (Cumulative Conjunction). அது ஆங்கிலத்தில் com, con, col, cor, co என்று திரிந்து with, together, altogether, completely என்று பொருள்படும் முன்னொட்டு (prefix) ஆகும்.

அதுவே கிரேக்க மொழியில் sym, syn, syl, sy என்று திரிந்து together, together with, in union with என்று பொருள்படும் முன்னொட்டாகும்.

அதுவே சமற்கிருதத்தில் ஸம் என்று திரிந்து, with, together with, along with, together, altogether என்று பொருள்படும் முன்னொட்டாகும்.

ஸம்ஸ்க்ருத என்னும் சொல்லிற்கு, put together, constructed, well or completely formed, perfected என்று மானியர் உவில்லியம்சு சமற்கிருத ஆங்கில அகரமுதலி பொருள் கூறுதல் காண்க.

கருத்தல் என்பது, செய்தல் என்று பொருள்பட்டுக் கட்டல் (களவு செய்தல்), வின்னல் (வினவுதல்) என்பன போலக் குமரிநாட்டில் வழங்கிப் பின்னர் வழக்கற்றுப் போன ஒரு தூய தென்சொல்.

தமிழகத்தில் தொன்றுதொட்டு வெள்ளாளர், காராளர் என்று இருவேறு நிறத்தார் இருந்துவந்திருக்கின்றனர். அளவிறந்து வெயிலிற் காய்பவர் கருத்திருத்தலும், நிழலில் வேலை செய்பவர் வெளுத்திருத்தலும் பெரும்பான்மை யியல்பு. கையிற் காழ்ப்பேற வேலைசெய்யின் கருப்பர் கை கருத்தும், சிவப்பர் கை சிவந்தும் போகும். அதனால், செய்தலைக் குறிக்கக் கருத்தல் செய்தல், என இரு வினைச்சொற்கள் தோன்றின. “செய்த கை சேவேறும் செய்யாத கை நோவேறும்” என்பது பழமொழி.

கரு

கருமம் - கம்மம் = கம்மியத் தொழில். "கம்மஞ்செய் மாக்கள்”

(நாலடி. 393)

கம்மம் - கம் - கம்மவர் - கம்மவாரு (தெ.) = முதல் தொழிலான உழவைச் செய்யும் தெலுங்க வகுப்பார்.

கருமம் (வ.) கர்மன்

=

கம் = 1. தொழில்

"ஈமுங் கம்மும் உரும்என் கிளவியும்" (தொல். எழுத்து. 33)

2. கம்மியர் தொழில் (நன். 223, விருத்.)

கம் - காம் (இந்தி)

கம் - கம்மாளன் = 1. கொல்லன், தச்சன், கற்றச்சன், தட்டான், கன்னான் என்னும் ஐவகைக் கொல்லருள் ஒரு வகுப்பான். 2. பொற்கொல்லன். கம்மாளன் – பிரா. கம்மார, (வ.) கார்மார.

கம் - கம்மி = 1. தொழிலாளி, "மட்கலஞ்செய் கம்மி" (பாரத. திரௌ. 64) 2. கற்றச்சன்.