உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

செந்தமிழ்ச் சிறப்பு

வேதம் என்னும் மறைநூலால் ஆரியம் தேவமொழியாயிற்றெனின் சிறுதெய்வ வழுத்துத் திரட்டாகிய வேதத்தினும் வீடுபேறளிக்கும் பெருந் தேவ வழுத்துத் திரட்டும் கடவுள் வழுத்துத் திரட்டுமாகிய தமிழ்மறைகள், கோடிக்கணக்கான மடங்கு சிறந்தனவாதல் வேண்டும்.

இனி, வேதமொழி வல்லோசையும் மூச்சொலியும் நிரம்பியதனால் தேவமொழி யெனப்படும் எனின், அவ் விரண்டும் பன்மடங்கு சிறந்த காளவாய்க் கத்தலும் தேவமொழிக் கினமாதல் வேண்டும்.

இனி, வேதமொழியும் சமற்கிருதமும் எத்தகைய மொழிகள் என்பதைப் பார்ப்போம்.

வேதமொழி என்பது எத்தகையது?

வேத ஆரியர் மிகச் சிறுபான்மையரா யிருந்ததனால், கிரேக்கத்திற்கு மிக நெருக்கமாயிருந்த அவர் மொழி, அக்காலத்து வடநாட்டு வட்டார மொழியாகிய பிராகிருதத்தொடு இரண்டறக் கலந்து, அதன் பான்மையதாகி எகர ஒகரக் குறில் இழந்து இருமொழிக் கலவையாயிற்று.

சமற்கிருதம் எத்தகையது?

தமிழிலுள்ள பல்துறை யிலக்கியத்தை மொழிபெயர்த்தற்கு வேத மொழி போதிய சொல்வளமின்றி யிருந்ததனால், ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களை வேதமொழியோடு கலந்து, சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கை யிலக்கிய மொழியை உண்டாக்கினர்.

சமற்கிருதம் (ஸம்ஸ்க்ருத) என்றாலே கலந்து செய்யப்பட்டது

என்பதுதான் பொருள்.

L.

கும்முதல் = கூடுதல், கலத்தல். கும் - கும்மல் = கும்பல், குவியல். cumulus, heap. இதினின்றே cumulate, accumulate முதலிய ஆங்கிலச் சொற்கள் பிறக்கும்.

=

கும் - கும்மி கை குவித்தடித்துப் பாடியாடும் கூத்து.

கும் - குமி - குவி. குமி - குமிழ் - குமிழி = குவிந்த நீர் மொட்டு. குவி குவியல், குவால், குவை.

கும்பு கும்பல். கும்பு குப்பு

கும் - கொப்பம்.

குப்பல், குப்பை, குப்பம்,

கும்பு கூம்பு - கூப்பு, கூம்புதல் = குவிதல்.

கை கூப்புதல் = கை குவித்தல்.

கும்பு - கும்பிடு, கும்பிடுதல் = கை குவித்தல். கும் .

கொம் - கொம்மை. கொம்மை கொட்டுதல் = கை தட்டி யழைத்தல்.

=

கும்மி கொம்மி கும்மியாட்டம்.

கொம்மி தெ. கொப்பி (gobbi).