உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




19

உரிமைப்பேறு

ஒருவர்க்கு உரியது உரிமை. அது புறவுடல் பற்றியதும் அகவுடல் பற்றியதும் ஆக இருதிறப்படும். முன்னது எல்லார்க்கும் பொது; பின்னது பண்பட்ட மக்கட்கே சிறப்பு. மாந்தர்க்கு ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு ரு அல்லது சிற்சில உரிமைகள் தேவை. அவை நீர்வேட்கையும் உணவு வேட்கையும் போன்றவை. அவற்றை முயன்றோ, பிறரை வேண்டியோ, அவரோடு போராடியோ, பெறல் வேண்டும்.

இருதிற வுரிமைகளும் பின்வருமாறு ஐவகைப்படும்.

1. வளர்வுரிமை

கணவன் மனைவியரின் இன்பக் கூட்டத்தோடு பிள்ளைப்பேறு தொடர்புபடுத்தப்பட்டிருப்பதால், பெற்றோர் விரும்பினும் விரும்பா விடினும் பெரும்பாலும் பிள்ளைகள் பிறந்துவிடுகின்றன. நிலத்தில் விதைத்த விதை முளைத்தல் போன்றே பிள்ளைப்பேறும் இருப்பதால்,

"கேளாதே வந்து கிளைகளா யிற்றோன்றி’

(30)

என்று நாலடியார் கூறுவது பொருந்தாது. பிள்ளைகள் பெற்றோர் வினையாலேயே பெறப்படுவதால், அவற்றை வளர்ப்பது அவர் கடமையும், அவரால் வளர்க்கப்படுவது அவற்றின் உரிமையும், ஆகின்றது.

“எம்மைக் கேளாது ஏன் பிறந்தாய்?”

என்று, பெற்றோர் தம் பிள்ளை வளர்ப்பைத் தட்டிக் கழித்துவிட முடியாது.

குழவி பிறந்தவுடன் உணவிற்கு அழுவதே, ஓர் உரிமை வேட்கை யும் அதைப் பெறும் முயற்சியும் ஆகின்றது. சில சமயங்களில் தாய் வீட்டு வேலையில் ஆழ்ந்திருக்கும்போது, உரிய வேளையில் தன் சேய்க்குப் பால் கொடாதிருப்பதும் உண்டு. அவ் வேளையில் குழந்தையின் அழுகையொலி கேட்டுத் தாய் பால் கொடுப்பது வழக்கம். அதனால், “அழுதபிள்ளை பால் குடிக்கும்” என்னும் பழமொழியும் எழுந்தது.

குழவிப் பருவத்திலும் குழந்தைப் பருவத்திலும் பிள்ளைப் பருவத்திலும் வளர்ப்பதும், பையற் பருவத்திலும் இளமட்டப் பருவத்திலும் உணவளித்துக் காப்பதோடு ஓர் அலுவற்கோ தொழிலுக்கோ பயிற்று