உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உரிமைப்பேறு

129

விப்பதும், பருவம் வந்தபின் மணஞ்செய்து வைப்பதும், பெற்றோரின் கடமையாம். அந்நன்மைகளைப் பெறுவது பிள்ளைகளின் உரிமையாம்.

கைத்தொழிற் பயிற்சியினுங் கல்விப் பயிற்சி சிறந்ததாதலாலும், இருவகைப் பயிற்சியும் ஒருங்கே பெறுதலுங் கூடுமாதலாலும்,

'தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல்.'

99

“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்

என்று திருவாய்மலர்ந்தார் திருவள்ளுவர்.

2. வாழ்வுரிமை

(குறள். 67)

(குறள். 69)

ஒருவர் இவ் வுலகில் வாழ்வதற்குக் கல்விப் பயிற்சி அல்லது தொழிற் பயிற்சி, வேலைப்பேறு, பாதுகாப்பு - இம் மூன்றும் இன்றியமையாதன. ஒரு குடும்பத்திற் பிறந்தவனுக்கு எங்ஙனம் வளர்வுரிமையுண்டோ, அங்ஙனமே ஒரு நாட்டிற் பிறந்தவனுக்கு வாழ்வுரிமையுண்டு. அதற்குரிய மூன்றையும் அளிக்கக் கூடியதும் கடமைப்பட்டுள்ளதும், ஆளும் அரசே.

பயிற்சியின்றி எவ்வேலையும் பெறவும் செய்யவும் இயலாதாகை யால், நாட்டிற் பிறந்தவர்க்கெல்லாம், அவரவர் திறமை, விருப்பம், உடற்கூறு, மனப்பான்மை, மதிவன்மை முதலியவற்றிற்குத் தக்கவாறு, வெவ்வேறு துறையிற் பயிற்சியளித்தல் வேண்டும். “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.” ஆதலால், முதற்கண், நாலகவைக்கு மேற்பட்ட எல்லாப் பிள்ளை கட்கும் இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வியளித்தல் வேண்டும். எந்த அமைப்பும் நிலையாகவும் உறுதியாகவும் இருத்தற்கு அடிப்படை அகன்றிருத்தல் வேண்டும். இன்றேல், மேற்படை குலைந்துபோம்.

66

விளையும் பயிர் முளையில் தெரியும்.” ஆதலால், துவக்கப்பள்ளிக் கல்விப் பருவத்திலேயே, பெற்றோரும் ஆசிரியரும் பிள்ளைகளின் திறமையையும் மனப்பான்மையையும் கூர்ந்து நோக்கியறிந்து, அகக்கரண வலிமை விஞ்சியவரை மேற்கல்விப் பயிற்சிக்கும், புறக்கரண வலிமை விஞ்சியவரைத் தொழிற்பயிற்சிக்கும், அனுப்புதல் வேண்டும்.

மேற்கல்விப் பயிற்சியிலும், அன்பும் தொண்டு மனப்பான்மையும் உள்ளவரை மருத்துவக் கல்விக்கும் நாவன்மையும் நினைவாற்றலும் நடுநிலையும் உள்ளவரைச் சட்டக் கல்விக்கும், ஓவிய வரைவாற்றலும் புதுப் புனைவுத் திறனும் கணித மதியும் உள்ளவரைப் பொறிவினை அல்லது சூழ்ச்சியவினைக் கல்விக்கும், இடைவிடாப் படிப்பும் எடுத்து விளக்குந் திறனும் உள்ளவரை ஆசிரியப் பயிற்சிக் கல்விக்கும், வளர்த்தியும் உடல் வலிமையும் அஞ்சாமையும் துணிசெயல் மறமும் உள்ளவரைப் படைத் துறைக் கல்விக்கும், இன்குரலும் இசைவிருப்பும் நீள்விரலும் உள்ளவரை