உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

செந்தமிழ்ச் சிறப்பு என்னும் நன்னூல் நூற்பாவிற் குறிக்கப்பட்டுள்ள எழுத்திலக்கணம் பன்னிரண்டனுள், 'முதலீ றிடைநிலை” என்னும் மூன்றும் தமிழுக்கே சிறப்பாக வுரியனவாம். பிற மொழிகளில் எந்த எழுத்தும் எந்த இடத்திலும் வரலாம் . தமிழில் அங்ஙனம் வரமுடியாது.

இனி, வடமொழி வல்லின மெய்களின் நால்வகையுள், உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிக்கும் பின் மூன்று வகைகளேயன்றி, இயல்பான தாகக் கருதப்படும் முதல் வகையும், தமிழ் வல்லினத்தோடு ஒவ்வாது இருமடி வலித்தொலிக்கும் கடுவல்லினமாம். காகத்தைக் குறிக்கும் ‘kaka' எனும் வடசொல் வடிவம். தமிழில் 'காக்க' என்று ககரம் இரட்டித்து எழுதப் பட்டால்தான், ஒருமருங்கு வடமொழியை ஒத்தொலிக்க முடியும். 'மேக்கர்' (maker) என்னும் ஆங்கிலச் சொல்லும் இத்தகையதே. இவ் வேறுபாட்டை, எழுத்தொலிகளை நுண்ணிதாகக் கண்டவர்போல் தம்மைக் காட்டிக் கொள்ளும் மேலை வண்ணனைமொழி நூலாரும் இன்னும் அறியவில்லை.

மெலியும் வலியுமாக அடுத்துவரும் ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற என்னும் இணைமெய்கள், ஆரியத்திலும் திரவிடத்திலும் போல ‘ங்க்க’, ‘ஞ்ச்ச', ந்த்த', ‘ம்ப்ப', ‘ன்ற்ற’ என்று என்றேனும் தமிழில்

ண்ட்ட’,

வலித்தொலிப்பதில்லை.

2

மூச்சொலி (Aspirate) தமிழில் இல்லவேயில்லை. எடுப்பொலி (Voice Sound) மெலியடுத்த வலிக்கே யுண்டு.

சொல்லிடையில் நிகழும் உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்னும் இருவகை மெய்ச் சேர்க்கையுள், முன்னதில் இரண்டாவது மெய் 'சுக்கு'. 'பட்டு' என்பவற்றிற்போல் உயிரோடு கூடியதாகவே யிருக்கும்; பின்னதில் இரண்டாவது மெய் காய்ப்பு. வாழ்க்கை என்பவற்றிற் போல் தனிமெய்யாகவோ, 'வெட்கம், 'பயிற்சி' என்பவற்றிற் போல் உயிரோடு கூடிய மெய்யாகவோ இருக்கும். ஆயின், இரு தனி மெய்களே யன்றி, 'ஸாந்த்வ், 'சமற்க்ருத’ என்னும் வடசொற்களிலும், camps, tempts என்னும் ஆங்கிலச் சொற்களிலும் போல், முத்தனி மெய்களும் நாற்றனி மெய்களும் தமிழில் வரவே வரா.

இங்ஙனம் தமிழ் பெரும்பாலும் மெல்லோசை மொழியாயிருப்பத னாலேயே, அது உலக முதன்மொழியாய்த் தோன்றியும் இறந்து படாமல் இன்னும் இளமை நிலையில் இருந்து வருகின்றது. அதைத் தாய்மொழியாகக் கொண்டவரும் முயற்சி வருத்தமின்றி எளிதாகப் பேசி வருகின்றனர். காலஞ்சென்ற பா.வே. மாணிக்க நாயகர், ஒரு முறை உலகப் பெருமொழி களுள் ஒவ்வொன்றிலும் அவ் வாயிரம் சொற்களை யெடுத்து, அவற்றிற்குச் செலவிடும் மூச்சை மூச்சுமானி கொண்டு அளந்து பார்த்ததில், சமற்கிருதத் திற்கே மிகுந்தும் தமிழுக்கு மிகக் குறைந்தும் இருப்பதாகக் கண்டார். இவ் வுண்மையையே, மறைமலையடிகள், க்ருதம், த்ருஷ்டி, த்வரிதம், ச்ருஷ்டி,