உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழின் தனிப் பெருந்தன்மைகள்

9

ஹ்ருதய என்னும் வடசொற்களோடு, இழுது, பார்வை, விரைவு, படைப்பு, நெஞ்சம் என்னும் தென்சொற்களை ஒப்புநோக்கி எளிதாக விளக்கிக் காட்டினார்.

ஒரு மொழிக்கு வேண்டியது சொல் வளமே யன்றி ஒலிவளமன்று. ஆரியம், சேமியம் முதலிய மொழிக் குடும்பங்கள் தோன்றாத அத் தொல் பண்டைக் காலத்திலும், எக்காலத்தும் மாந்தன் உள்ளத்தில் எழக்கூடிய கருத்துகளை யெல்லாந் தெரிவிக்கத் தக்க சொற்களையும் சொல்லுறுப்பு களையும், நம் குமரிநாட்டு முன்னோர் படைத்து வைத்துள்ளனர். ஆதலால். ஒலிமென்மையால் தமிழுக்கு உயர்வேயன்றி இழிவில்லை என்றும், அதைப் பேசுவார்க்கு மூச்சு வருத்தமும் பேச்சு வருத்தமு மின்மையால் வாழ்நாள் நீடிக்குமென்றும், அறிந்துகொள்க.

3. தாய்மை

பெற்றோரைக் குறிக்கும் அம்மை அப்பன் என்னும் குமரிநாட்டுத் தமிழ்ச்சொற்கள், ஆரியம் உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றில் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.

நூன், நூம் என்னும் பண்டைத் தமிழ் முன்னிலைப் பெயர்கள், வடநாட்டு இந்தியில் து, தும் என்றும், இலத்தீனில் து, வேஸ் என்றும், கிரேக்கத்தில் தூ (சூ), ஹ்மேயிஸ் என்றும் பழைய ஆங்கிலத்தில் தூ, யி(யூ) என்றும், சமற்கிருதத்தில் த்வம், யூயம் என்றும் முறையே திரிந்து வழங்குகின்றன. அல்லது வழங்கியிருக்கின்றன.

மேலை மொழிகளிலுள்ள தென்சொல்லொத்த சொற்கட் கெல்லாம் மூலம் தமிழிலேயே இருக்கின்றன.

எ-டு

அயற்சொல்

இலத்தீன்-மன்ஸுஸ்

கிரேக்கம்-மாஸ்திகோஸ் (mastigos)

ஆங்கிலம்-துரூ

துருக்கி-கான்

கொரொ

தமிழ்ச்சொல்

மூலம்

மனை

மன்

மத்திகை

மொத்து

துருவ

துள்

கோன்

கோவன்

கரு

கள்

"

சீன மொழியில் மா என்பது குதிரையையும் தா என்பது வலிமை யையும் குறிப்பதாகச் சொல்லப்படுகின்றது.

தமிழின் சொல்வளத்தைக் குறிக்க வந்த கால்டுவெலார். அம் மொழி தனக்கே சிறப்பாக வுரிய வீடு என்னும் சொல்லை மட்டுமன்றி, இல் என்னும் தெலுங்கச் சொல்லையும், மனை என்னும் கன்னடச் சொல்லையும்,