உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

செந்தமிழ்ச் சிறப்பு

சமற்கிருதத்திற்கும் பின்னிய (Finnish) மொழிகட்கும் பொதுவான குடி என்னும் சொல்லையும், தன்னகத்துக் கொண்டுள்ளதென்று, அது திராவிடத் திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும் என்னும் உண்மையைக் குறிப்பாகக் கூறியிருக்கின்றார். மேலும், தமிழ் உலக முதன்மொழிக்கு மிக நெருங்கியதென்றும், ஆரியத்திற்கு முந்தியதென்றும், பல்வேறிடங்களில் வெளிப்படையாகவும் கூறியுள்ளார். சமற்கிருதத்தில் ஐந்தி லிருபங்கு தமிழ் என்பது இன்று ஆராய்ச்சியால் தெரியவருகின்றது.

ஆ, ஈ. ஊ என்னும் முத்தமிழ்ச் சுட்டெழுத்துகளினின்றே ஆரியச் சுட்டுச் சொற்களும் படர்க்கைப் பகரப் பெயர்களும் (Demonstratives and Pronouns of the third Person) தோன்றிப் பற்பலவாறு திரிந்து வழங்கு கின்றன. பல ஆரிய அடிப்படைச் சொற்களும் தமிழாயிருக்கின்றன.

எ-டு: இலத்தீன் amo (அமர்), ser (சேர்), do (தா). அமர்தல் - அன்பு கூர்தல்.

சுருங்கச் சொல்லின், தமிழ்ச்சொல்லே யில்லாத உலகப் பெருமொழி ஒன்றுமே யில்லை யென்பது மறுக்க முடியாத உண்மையாகும். 4. தூய்மை

தமிழ் குமரிநாட்டில் தானே தோன்றி வளர்ந்த தனிமொழியாதலாலும், அதை நுண்ணறிவு மிக்க பொதுமக்களும் புலமக்களும் பண்படுத்தி வளர்த்தமையாலும், நீராவியையும் மின்னியத்தையும் துணைக் கொள்ளாத எல்லாக் கலைகளையும் அறிவியல்களையும் பண்டைத் தமிழரே கண்டறிந்துவிட்டமையாலும், யிரக்கணக்கான உலக வழக்குச் சொற்களும் நூல் வழக்குச் சொற்களும் இறந்துபட்ட இக்காலத்தும், எப்பொருள் பற்றியும், பழஞ்சொற் கொண்டும் புதுச்சொற் புனைந்தும், முழுத் தூய்மையாகப் பேசத் தமிழ் ஒன்றில்தான் இயலும். இவ் வுண்மையை அறிந்தே, தமிழ் வடமொழித் துணையின்றித் தனித்து வழங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவுஞ் செய்யும் என்று கூறினார் கால்டுவெலார்.

செந்தமிழ்ச் சொல்வளத்தைக் காண, ஒரு பருக்கைப் பதமாக நிலைத்திணைச் சொற்களை நோக்கினும் போதும். குமரிநாட்டுத் தமிழ்ப் பொதுமக்கள், இலைகளை நால்வகையாக வகுத்து, வேம்பும் வாழையும் போல மெல்லிதாயிருப்பதை இலையென்றும். நெல்லும் புல்லும் போலத் தாளை (தண்டை)யொட்டி நீண்டு சுரசுரப்பாக விருப்பதைத் தாள் என்றும், சோளமுங் கரும்பும் போலப் பெருந்தாளாக நீண்டு தொங்குவதைத் தோகை யென்றும், தென்னையும் பனையும் போலத் திண்ணமா யிருப்பதை ஓலையென்றும் வழங்கினர். பூ நிலைகளை ஐவகையாகக் கண்டு தோன்றிய நிலையில் அரும்பு என்றும், மலரத் தொடங்கிய நிலையிற் போது என்றும், மலர்ந்த நிலையில் மலர் என்றும், உதிர்ந்து விழுந்த நிலையில் வீ யென்றும், வாடிச் சிவந்த நிலையிற் செம்மல் என்றும்,