உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழின் தனிப் பெருந்தன்மைகள்

11

சொல்லினர்; காய்நிலைகளை நால்வகையாகக் கண்டு தோன்றிய நிலையிற் பிஞ்சு என்றும், சற்றுப் பருத்த நிலையிற் பிருக்கு என்றும், முற்றும் பருத்த நிலையிற் காய் என்றும், பழுத்த நிலையிற் பழம் (மஞ்சள் நிறமானது) அல்லது கனி (கனிவாயிருப்பது) என்றும், பெயரிட்டனர். இனி, பிஞ்சு நிலையிலும் வாழைக்குக் கச்சல் என்றும், மாவிற்கு வடு என்றும், பலா விற்கு மூசு என்றும், தென்னை பனைக்குக் குரும்பை என்றும், பிறவற்றிற்குப் பிறவாறும், சிறப்புப் பெயர் குறித்தனர்.

ஆங்கிலம் இலக்கக்கணக்கான சொற்களைக் கொண்டிருந்தும், ஏறத்தாழ எல்லா மொழிகளினின்றுங் கடன் கொண்டும், காயைப் பழுக்காத பழம் என்று குறிப்பதும், வெயிலையும் நிலவையுங் குறிக்கத் தனிச் சொல் இல்லாதிருப்பதும், இங்குக் கவனிக்கத்தக்கது.

தமிழின் இயல்பை யறியாத சிலர், ஆங்கிலம் போல் தமிழையுங் கருதிக்கொண்டு, ஒரு மொழி பிற மொழியினின்று கடன் கொண்டால்தான் வளர முடியுமென்றும், மொழித் தூய்மை யென்பது பொருளற்ற மொழிவெறி யென்றும், கூறுவர். காலதர், சாளரம், பலகணி என முச்சொல் லிருக்கவும், சன்னல் என்னும் போர்த்துக்கீசியச் சொல்லை வேண்டாது வழங்கியதால், அம் முச்சொல்லும் வழக்கற்றுப் போய்த் தமிழ் வறுமை யடைந்துள்ளமை காண்க. "தமிழர்க்குள்ள பெருமையெல்லாம் அவர் தொன்றுதொட்டுத் தூய்தாக வழங்கி வருந் தமிழ்மொழியினையே சார்ந்திருக்கின்றது” என்று, மறைமலையடிகளார் கூறியிருப்பதை இனிமேலாயினுங் கருத்தாய்க்

கவனிக்க.

5. செம்மை

சொற்களும் சொற்றொடர்களும் வடிவிலும் பொருளிலும் இலக்கண முடிபிலும் வழாநிலை, வழுநிலை, வழுவமைதிநிலை என முந்நிலைப் படும். அவற்றுள், வழுநிலையில்லது செந்தமிழ் என்றும், அஃதுள்ளது கொடுந் தமிழ் என்றும், தமிழை இருவகையாக வகுத்தனர் இலக்கண நூலார். மக்கட்கு ஒழுக்க வரம்பு எத்துணை 6 இன்றியமையாததோ, அத்துணை இன்றியமையாததே மொழிக்கு இலக்கண வரம்பும். சொற்களின் திருந்திய வடிவையும் ஓரிய லொழுங்கையும் தமிழிற்போல் வேறெம்மொழியிலுங் காண முடியாது.

எ-டு:

தமிழ்

தன்மைப் பெயர்

யான், யாம்

தெலுங்கு ஏனு, மேமு

நான், நாம்

முன்னிலைப் பெயர் நீன்(நீ). நீம்

நேனு, மனமு நீவு, மீரு