உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

படர்க்கைப் பெயர் தான், தாம்

தானு, தாமு

செந்தமிழ்ச் சிறப்பு

அ,இ,உ என்னும் முச்சுட்டெழுத்துகளையும் எ,ஏ, யா என்னும் மூவினாவெழுத்துகளையும் அடியாகக் கொண்ட தமிழ் ஐம்பாற் பெயர்களின் ஓரியலொழுங்கு, மொழிநூலறிஞரின் உள்ளத்தை மிகக் கவரத் தக்கது. இது போன்ற அழகிய மெய்ப்பொருளிய லொழுங்கை வேறெம் மொழியிலேனும் மொழிக் குடும்பத்திலேனும் காண முடியாதென்று. கால்டுவெலார் வியந்து கூறியிருத்தலைக் காண்க.

புதுப்பெருக்கு நீரைக்குறிக்கும் வெள்ளம் என்னும் செந்தமிழ்ச் சொல் மலையாளத்தில் நீர்ப் பொதுவைக் குறிப்பதும், விடை சொல்லுதலைக் குறிக்கும் செப்புதல் என்னும் செந்தமிழ்ச் சொல் தெலுங்கிற் பொதுவாகச் சொல்லுதலைக் குறித்தலும், ஒன்றைச் செய்ய ஆற்றுதலை (திறமையோ டிருத்தலை)க் குறிக்கும் மாட்டுதல் என்னும் செந்தமிழ்ச்சொல் கன்னடத் தில் (மாடுதல் என்னும் வடிவில்), பொதுவாகச் செய்தலைக் குறிக்கின்றமை யும் கொடுந்தமிழ் நிலையாம். கூர்ந்து பார்த்தலைக் குறிக்கும் நோக்குதல் என்னும் சொல், மலையாளத்திற் பொதுவாகப் பார்த்தலைக் குறித்தலும் அஃதே.

செந்தமிழெழுத்துகள் கொடுந்தமிழிற் பலவாறு திரியுமேனும், வலி மெலித்தல் மலையாளத்திற்கும் ரகரம் தொகல் தெலுங்கிற்கும் பகரம் மூச்சொலியாதல் கன்னடத்திற்கும், சிறப்பாகும்.

எ-டு:

மலையாளம் : கஞ்சி-கஞ்ஞி, நீங்கள்- நிங்ஙள், வந்து வந்நு.

தெலுங்கு

கன்னடம்

சுருட்டு - த்சுட்ட, பருப்பு த்சுட்ட, பருப்பு - பப்பு, மருந்து - மந்து.
பள்ளி ஹள்ளி, பாளை – ஹாளெ, பொன் – ஹொன்னு.

வடசொற்கள் பின்வருமாறு பலவகையில் திரியும்: ஆயிரம் – ஸகஸ்ர, கலுழன் - கருட (g), கோட்டம் – கோஷ்ட, கோட்டை - கோட்ட, சாயை - - சாயா (c), தூணம் - ஸ்தூணா, நகரம் - நகர (g), பள்ளி - பல்லி, மயில் - மயூர, முகம் - முக (kh), வட்டம் - வ்ருத்த.

_

இங்ஙனம் தமிழுக்கு எது வழுநிலையோ, அது பிற மொழிகட்கு வழாநிலையாம். தமிழுக்குச் செம்மை இன்றியமையாத பண்பாயிருத்தலி னாலேயே, அது செந்தமிழ் எனப்பட்டது. ஒருவன் பொதுமக்களோடு எத்துணைக் கொச்சையாய்ப் பேசினும், ஏடெடுத்தெழுதும் போதும் மேடை யேறிப் பேசும் போதும் இலக்கண நடையைக் கையாளவேண்டு மென்பதே தமிழ் மரபு. அம் மரபே, மூவாயிரம் ஆண்டாகத் தமிழைக் கெடுக்கப் பகைவர் சூழ்ச்சி செய்துவரினும், அது கெடாவாறு அதனைக் காத்து வந்திருக்கின்றது. உலக வழக்கு வேறு; கொச்சை வழக்கு வேறு. உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே. ஆதலால், பிற மொழிகள்போல் தமிழையுங்