உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழின் தனிப் பெருந்தன்மைகள்

13

கருதிக்கொண்டு, பொதுமக்கள் கொச்சை நடையே உலக வழக்கென்பது தமிழுக்கு எட்டுணையும் பொருந்தாதென்க.

6. மும்மை

6

கி.மு. பத்தாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய தலைக்கழகக் காலத்திலிருந்தே, இசையும் நாடகமும் இயற்றமிழோடு சேர்க்கப்பட்டு, இலக்கியத்தமிழ் முத்தமிழென வழங்கி வந்திருக்கின்றது. அதனால், முதலிரு கழகத்திலும் வழங்கிய இலக்கண நூல்கள் முத்தமிழும் பற்றியன வாகவே யிருந்ததாகத் தெரிகின்றது. இங்ஙனம் வேறெம் மொழியிலுமில்லாத வழக்கிற்கு, இசையும் நடிப்பும் பேச்சொடு இயல்பாகக் கலந்திருப்பதொடு, பண்டைத் தமிழரின் இசை நாடகக் கலைத் தேர்ச்சியும் பண்டைத் தமிழிலக்கியம் முற்றும் செய்யுள் வடிவிலிருந்தமையும் கரணியமாகும். 7. இயற்கை வளர்ச்சி

தமிழில் இடுகுறிச் சொல்லே யில்லை. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது தொல்காப்பிய நூற்பா (640). ஒருமை பன்மை யெண்ணும் பொருட்பாலுமன்றி, ஆரியத்திற்போல் இருமை யெண்ணும் சொற்பாலும் தமிழமைப்பில் அமையவில்லை.

பனுவல்களில் ஒரு நாட்டை வரணிக்கும்போது உள்பொருளையும் உள்நிகழ்ச்சியையுமே யன்றி, இல்பொருளையும் இல்நிகழ்ச்சியையும் ஆரிய வருகைக்கு முற்பட்ட பண்டைத் தமிழ்ப் புலவர் கூறுவதில்லை.

செய்யுளணிக ளெல்லாம் இயற்கையாக அமைந்தன வன்றிச் செயற்கையாக அமைக்கப்பட்டனவல்ல.

8. இலக்கண நிறைவு

மற்றெல்லா மொழியிலக்கணங்களும் எழுத்தும், சொல்லும், சொற்றொடரும், யாப்பும், அணியும் ஆகிய ஐந்தையே கூற, தமிழிலக்கணம் மட்டும் அவற்றொடு செய்யுட்கும் நூற்கும் உள்ள பொருளையுஞ் சேர்த்து அறுகூறுகளைக் கூறுகின்றது. ஆயின் சொற்றொடரும் யாப்பும் அணியும் பொருளில் அடக்கப்பட்டு, எழுத்தும் சொல்லும் பொருளும் என முப்பாலவாகவே பண்டை யியற்றமிழ் இலக்கணங்க ளெல்லாம் வழங்கி வந்திருக்கின்றன.

அகம் புறம் என்னும் இருவகைப் பாகுபாட்டுள் எல்லாப் பொருள் களும் அடக்கப்பட்டுவிட்டன. புறப்பொருள் பற்றிய எழுதிணைகளுள், முதலைந்தும் அரசனுக்குச் சிறப்புக் கொடுத்தற்பொருட்டு அவனுக்குரிய போர்த் தொழிலையே பற்றிக் கூறினும், வாகை பாடாண் என்னும் இறுதியிரண்டும், மற்றெல்லா மக்கள் தொழில்களையும் சேர்த்துத் தழுவுவன வாகும். இதை யறியாதார் தமிழ்ப் பொருளிலக்கணம் குறைபாடுள்ளதெனக் குறை கூறுவர்.